தவறாக நடக்க முற்பட்ட நபர் தப்பித்து கொள்வதற்காக உடம்பில் மண்ணெண்ணையை ஊற்றி தீக்குளித்த பெண் பரிதாபமாகப் பலி..!

Share this post:

n

வாலாஜாபேட்டை, இலங்கை தமிழர் முகாமில் தீக்குளித்த பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

வேலுார் மாவட்டம், வாலாஜாபேட்டையில் இலங்கை தமிழர்கள் முகாம் உள்ளது. இங்கு 45 வயதான ஜெகதீஸ்வரன் மற்றும் அவரது மனைவி 26 வயதான துஷாந்தினி வசித்து வருகின்றனர்.

கடந்த ஆகஸ்ட் மாதம் 8ஆம் திகதி துஷாந்தினி வீட்டில் தனியாக இருந்துள்ளார். இதன் போது அதே முகாமில் வசிக்கும் அவரது உறவினரான தயாபரன், துஷாந்தினியிடம் தவறாக நடக்க முற்பட்டுள்ளார்.

இந்நிலையில், தயாபரனிடம் இருந்து தப்பிக்க, தன் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தார் துஷாந்தினி.

இதனையடுத்து, ஆபத்தான நிலையில் சென்னை அரச மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட துஷாந்தினி, நேற்று காலை உயிரிழந்துள்ளார்.

இதேவேளை, சம்பவம் தொடர்பில் வாலாஜாபேட்டை பொலிஸார் தயாபரனை கைது செய்துள்ளனர். உயிரிழந்த துஷாந்தினிக்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share This:
Loading...

Related Posts

Loading...