கண்டதை சாப்பிட்டு வயிறு எரியுதா? அதிலிருந்து உடனே விடுபட சில டிப்ஸ்…

Share this post:

rerr

உண்ணும் உணவை செரிப்பதற்கு சாதாரணமாக வயிற்றில் அமிலம் சுரக்கப்படும். இந்த அமிலம் அளவுக்கு அதிகமாக சுரக்கும் நிலையே அசிடிட்டி. ஒவ்வொருவரும் தன் வாழ்நாளில் ஒருமுறையாவது அசிடிட்டி பிரச்சனையால் அவஸ்தைப்பட்டிருப்போம்.

இந்த அசிடிட்டி பிரச்சனைக்கு என்ன தான் கடைகளில் மருந்துகள் விற்கப்பட்டாலும், இயற்கை வழிகளின் மூலம் மிகவும் வேகமாக சரிசெய்யலாம். இங்கு அசிடிட்டி பிரச்சனைக்கு உடனடி நிவாரணம் வழங்கும் சில இயற்கை வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

குளிர்ந்த பால்
அசிடிட்டி இருக்கும் போது குளிர்ச்சியான பாலை குடித்தால் உடனடி நிவாரணம் கிடைக்கும். ஏனெனில் பாலில் உள்ள கால்சியம், அமிலத்தின் உற்பத்தியைக் குறைக்கும்.

மோர்
மோரில் உள்ள லாக்டிக் அமிலம், வயிற்றில் அதிகமாக சுரக்கப்படும் அமிலத்தின் உற்பத்தியை சாதாரண நிலைக்கு கொண்டு வரும்.

வாழைப்பழம்
வாழைப்பபழம் வயிற்றில் உற்பத்தி செய்யப்படும் அதிகப்படியான அமிலத்தின் அளவைக் குறைக்கும். இதற்கு அதில் உள்ள பொட்டாசியம் தான் காரணம்.

துளசி இலைகள்
துளசி இலையில் வயிற்றில் இருக்கும் புண்ணை குணப்படுத்தும் தன்மைகள் உள்ளது. மேலும் இது வயிற்றில் அமில உற்பத்தியைக் குறைத்து, பாதுகாப்பு படலத்தை உருவாக்கும்.

Share This:
Loading...

Recent Posts

Loading...