தலைவலிக்கு சிறந்த எளிய 20 பாட்டி வைத்தியங்கள்..!!!

Share this post:

yt

1.புதினா இலைகளை இடித்து சாறு எடுத்து நெற்றிப் பொட்டில் பூசி வந்தால் தலைவலி குறையும்.

2, கிராம்பு, சீரகம் ஆகியவற்றை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து சாப்பிட்டு வந்தால் சூட்டினால் ஏற்படும் தலைவலி குறையும்.

3, கிராம்பை எடுத்து சிறிது நீர் விட்டு நன்றாக அரைத்து தலைவலியின் போது சிறிது எடுத்து நெற்றியில் பூசி வந்தால் தலைவலி குறையும்.

4, டீ அல்லது காப்பியில் சிறிதளவு எலுமிச்சை பழச்சாறு கலந்து குடித்து வந்தால் தலைவலி குறையும்.

5, சுக்கை தோல் நீக்கி கொள்ளவும். தோல் நீக்கிய சுக்கை நன்றாக இடித்து கொள்ளவும். ஒரு மண் பாத்திரத்தில் 1 லிட்டர் தூய நீர் விட்டு கொதிக்க விட்டு சுக்கு தூளை கொட்டி மூடி 5 நிமிடங்கள் கழித்து கற்பூரத்தை போட்டு 10 நிமிடங்கள் மூடி வைக்கவும். இந்த சுக்கு நீரை இளஞ்சூட்டில் தலை, முகம் ஆகியவற்றை கால, மாலை என தொடர்ந்து கழுவி வந்தால் தலைவலி குறையும்.

6, தலைவலி ஏற்படும் நேரத்தில் சிறிது மருதாணி இலைகளை அரைத்து நெற்றிப் பொட்டில் தடவி வந்தால் தலைவலி குறையும்.

7, ஒரு டம்ளர் பாலை எடுத்து அதனுடன் 1 முட்டையின் மஞ்சள் கரு மட்டும் கலந்து நன்கு சூடுப்படுத்தி வெது வெதுப்பான சூட்டில் உடனே குடித்து வந்தால் தலைவலி குறையும்.

8, ஒரு இரும்பு பாத்திரத்தை எடுத்து நெருப்பின் மேல் வைத்து சூடு ஏறியவுடன் அதன் மேல் எலுமிச்சை பழச்சாற்றை விட்டு, வேறோரு இரும்பு துண்டினால் அந்த சாற்றை உரைத்து அதை எடுத்து பற்றுப் போட்டு வந்தால் தலைவலி குறையும்.

9, தேவையான அளவு மிளகை எடுத்து, பாலில் அரைத்து பசும்பாலுடன் கலக்கி சிறிதளவு தலையில் தடவி வைத்திருந்து பிறகு குளித்து வந்தால் தலைவலி குறையும்.

10, 2 மிளகை எடுத்து அதை சிறிது தேங்காய் எண்ணெயை விட்டு நன்கு அரைத்து நெற்றியில் தடவி பற்று போட்டு வந்தால் தலைவலி குறையும்.

11, கடுகுத்தூள், அரிசிமாவு இவைகளை சரிபாதியாக எடுத்து வெந்நீர் கலந்து களிபோல் கிளறி அதை நெற்றியில் பற்றுப் போட த‌லைவ‌லி குறையும்.

12, நெல்லிக்காயை அரை லிட்டர் சாறு எடுத்து அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து 3 நாள் வெயிலில் காயவைத்து பின் தேங்காய் எண்ணெயை சேர்த்து கொதிக்க வைத்து ஆவி பிடிக்க‌ தலைவலி குறையும்.

13, த‌லைவலிக்கு இஞ்சியைத் தட்டி வலியுள்ள இடத்தில் சிறிது தடவ தலைவலி குறையும்.

14, துள‌சி இலையை மென்று தின்று விட்டு தலையிலும் தேய்க்க‌த் தலைவ‌லி குறையு‌ம்.

15, முள்ளங்கிச் சாறு எடுத்துப் பருகி வந்தால் தலைவலி குறையும்.

16, கொதிக்கும் தண்ணீரில் காப்பிக் கொட்டை தூளைப் போட்டு ஆவி பிடிக்க தலைவலி குறையும்.

17, வெற்றிலை சாறு எடுத்துக் அதில் கற்பூரத்தைப் போட்டு நன்றாக குழைத்துப் பூசவும் தலைவலி தீரும்.

18, குங்குமப்பூவை மைய அரைத்து நெற்றிப்பொட்டில் தடவ தலைவலி குணமாகும்.

19, நெல்லிக்காயை அரைத்து சிறிதளவு குங்குமப்பூ கலந்து ரோஜா நீருடன் கலந்து குடிக்க தலைவலி நீங்கும்.

20, தலைச்சுற்று குறைய‌ முருங்கை இலைக் கொழுந்தை,தாய்ப்பால் விட்டரைத்து நெற்றியில் பற்றுப் போட தலைச்சுற்று குறையும்.

Share This:
Loading...

Related Posts

Loading...