சித்தியின் கொடுமை! ஆண் குழந்தையின் பரிதாப நிலை… இலங்கையில் கொடூர சம்பவம்

Share this post:

ku

தமது சித்தியினால் சித்திரவதைக்குட்படுத்தப்பட்ட ஆண் குழந்தையொருவர் மஸ்கெலியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த குழந்தையின் இரு கரங்கள் மற்றும் அவரின் முகத்தில் சுடு நீர் ஊற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன் காரணமாக அவரின் இரு கரங்கள் மற்றும் முகத்தில் தீக்காயம் ஏற்பட்டுள்ளதாக எமது செய்தித் தொடர்பாளர் குறிப்பிட்டிருந்தார்.

மஸ்கெலியா பிரதேசத்தில் தோட்டமொன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நேற்று இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ள நிலையில் , வலி தாங்க முடியாமல் குழந்தை கதறியுள்ளதை தொடர்ந்து பிரதேசவாசிகள் இது தொடர்பில் காவற்துறைக்கு அறிவித்துள்ளனர்.

பின்னர் அங்கு வந்த காவற்துறையினர் குறித்த குழந்தையை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

இதன் போது , குழந்தையின் சித்தி மற்றும் பாட்டி இருவரையும் காவற்துறையினர் கைது செய்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இந்த குழந்தையின் தந்தை அவரின் தாயாரிடம் இருந்து விவாகரத்து பெற்றுள்ளதை தொடர்ந்து மீண்டும் திருமணம் செய்துக்கொண்டுள் நிலையில் , அவரின் சித்தியால் தினமும் குறித்த ஆண் குழந்தை சித்திரவதை செய்யப்படுவதாக தெரியவந்துள்ளது.

Share This:
Loading...

Related Posts

Loading...