அவுஸ்திரேலியாவுடனான T20 போட்டியில் விளையாட ஆர்வம் தெரிவிக்கும் லசித் மாலிங்க – அணியில் இடம் கொடுக்காத இலங்கை கிரிக்கட் சபை – காரணம் என்ன..?

Share this post:

las

அவுஸ்திரேலியாவுடன் இடம்பெறவுள்ள இரண்டு இருபதுக்கு இருபது போட்டிகளுக்காக இலங்கை அணி விபரம் இன்று அறிவிக்கப்பட்டிருந்தது.

எவ்வாறாயினும், உபாதை குணமான நிலையில் மீண்டும் பயிற்சிகளில் ஈடுபட்டுள்ள லசித் மாலிங்க அணியில் உள்ளடக்கப்படவில்லை.

இந்நிலையில் , ஹிரு ஸ்போர்ட் கோர்னருக்கு லசித் மாலிங்க வழங்கிய நேர்க்காணலில் தான் இந்த போட்டிகளில் விளையாட தயாராக உள்ளதாக தெரிவித்திருந்தார்.

தில்ஷானின் இறுதி போட்டியில் விளையாட ஆர்வத்துடன் காத்திருப்பதாக அவர் இதன் போது தெரிவித்திருந்தார்.

இதன் போது தனது கால் மீண்டும் உடைந்தாலும் கவலையில்லை என இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்க தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share This:
Loading...

Recent Posts

Loading...