பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு வழங்குமாறு ஜனாதிபதி உத்தரவு

Share this post:

mai

பொலிஸ் திணைக்களத்தில் நிலவி வரும் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு வழங்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார்.

பொலிஸ் உத்தியோகத்தர்கள் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகளை அடையாளம் கண்டு அவற்றுக்கு துரித கதியில் தீர்வு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு கிராமமான முறையில் பதவி உயர்வு வழங்கப்பட வேண்டுமெனவும் வெற்றிடங்களை நிரப்புவதற்கு உரிய திட்டமொன்று முன்னெடுக்கப்பட வேண்டுமெனவும் ஜனாதிபதி பொலிஸ் மா அதிபர் மற்றும் பொலிஸ் ஆணைக்குழுவிற்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

நாட்டு மக்களுக்கு காத்திரமான சேவையை வழங்க பொலிஸ் திணைக்களத்தில் நிலவும் பிரச்சினைகள் தீர்வு காணப்பட வேண்டியது அவசியமானது என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

Share This:
Loading...

Related Posts

Loading...