மனைவியை அடித்தே கொலை செய்த கணவன் – யாழில் சோகம்..!

Share this post:

GIR

கணவன் மேற்கொண்ட தாக்குதலில் கோப்பாய், திருநெல்வேலி – கலையடி பிரதேசத்தில் சேர்ந்த மனைவி உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

தனிப்பட்ட பிரச்சினை காரணமாக மனைவியை பொல்லால் கணவன் தாக்கியுள்ளதாகவும் தாக்குதலில் படுகாயமடைந்த மனைவி யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

65 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகவும் கணவன் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்று பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளதுடன் கோப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

Share This:
Loading...

Related Posts

Loading...