யாழ் போதனா வைத்தியசாலையில் நடந்த கூத்து – தாதிகள் அடிதடி!! ஒரு கணவன் இரு மனைவி..!

Share this post:

nu

யாழ் போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் இருதாதிகளுக்கு இடையில் இடம் பெற்ற மோதல் யாழ் நீதிமன்றம்வரை சென்றுள்ளது. யாழ் போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் இரு பெண் தாதிகளுகிடையிலேயே இந்த அடி பிடி நடந்துள்ளது.

கணவனும் மனைவியுமாக யாழ் போதனா வைத்தியசாலையில் தாதியர்களாக கடமையாற்றி வருகின்றனர். இந் நிலையில் அந்த வைத்தியசாலையில் கடமையாற்றும் இன்னொரு தாதியுடன் கணவன் தொடர்பில் இருப்பதை அறிந்துள்ளார் மனைவியான தாதி.

இதனால் கோபமடைந்த மனைவி கள்ளக்காதலில் ஈடுபட்ட தாதியுடன் சண்டையில் ஈடுபட்டு இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கியுள்ளனர்.

இச் சம்பவம் யாழ் பொலிஸ்நிலையம்வரை சென்றுள்ளது. தாக்குதலில் ஈடுபட்ட பெண்தாதிகள் இருவரும் நேற்று யாழ் நீதிமன்றில் ஆயர்ப்படுத்தப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டதாகத் தெரியவருகின்றது.

Share This:
Loading...

Related Posts

Loading...