“சுமந்திரனே நீ இன்னும் சாகவில்லையா?” என யாழில் சுமந்திரனிற்கு எதிராக தாய் இட்ட சாபத்தால் பரபரப்பு..! (Video)

Share this post:

sa

யாழ்ப்பாணத்திற்கு இன்று வெள்ளிக்கிழமை விஜயம்மேற்கொண்ட ஐ.நா செயலாளர் பான் கீ மூன் யாழ்.பொது நூலகத்தில் தமிழ் தேசியகூட்டமைப்பினரை சந்தித்தார்.

அவ்வேளை பொது நூலகத்திற்கு முன்பாக திரண்ட வலிந்து காணாமல் போக செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் கவனயீர்ப்பு போராட்டம்ஒன்றினை முன்னெடுத்து குறிப்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா சம்பந்தன் சுமந்திரன் ஆகியோரை திட்டி தீர்த்தனர்.

அவ்வேளை மக்கள் மத்தியில் இருந்து எழும்பிய குரல் ஒன்று பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனை கள்ள சுமந்திரனே நீ இன்னும் சாகவில்லையா? உனக்கு கொடும்பாவி எரித்தோமே எனவும் கோஷம் எழுப்பியமை குறிப்பிடத்தக்கது.

பாங்கி மூனை சந்திப்பதற்காக பாதிக்கப்பட்ட பெருமளவான தமிழ்மக்கள் நூலக வாயிலில் காத்திருந்தபோதும் தமிழ்த் தலைமைகள் அவர்களை சந்திப்பதற்குரிய வாய்ப்பினை ஏற்படுத்தி கொடுக்காத நிலையில் தமிழ்த் தலைமைகளின் மீது கடும் கோபம் கொண்ட காணாமல் போன உறவுகள் இவ்வாறு திட்டித்தீர்த்தமையை காணக்கூடியதாக இருந்தது.

Share This:
Loading...

Related Posts

Loading...