கிளிநொச்சியில் 2 பிள்ளைகளின் தாய் சடலமாக!! கொலையா?? தற்கொலையா?? (Photos)

Share this post:

கிளிநொச்சி – வட்டக்கச்சி பகுதியில் பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக வட்டக்கச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வட்டக்கச்சி பகுதியிலுள்ள வீடொன்றில் இருந்து, 2 பிள்ளைகளின் தாயான 50 வயதுடைய சிறிஸ்கந்தராசா சந்திரபாரதி என்ற பெண்ணே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சம்பவ இடத்திற்கு சென்ற கிளிநொச்சி மாவட்ட நீதவான் சடலத்தை பார்வையிட்டதுடன், வட்டக்கச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சம்பவம் கொலையா அல்லது தற்கொலையா என்ற கோணத்தில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

1

2

3

Share This:
Loading...

Related Posts

Loading...