காதலன் தன்னை ஏமாற்றுவதாக நினைத்து காதலி செய்த செயலால் காதலன் தற்கொலை..!

Share this post:

katha

தமிழ்நாட்டின் வாழப்பாடி அருகே உள்ள விலாரிபாளையம் ஊராட்சி மோட்டூர் கிராமத்தை சேர்ந்த பிரியாவும்(19), ஆட்டோ டிரைவரான முருகனும்(23) காதலித்துள்ளனர்.

பிரியா அப்பா இல்லாமல் தாய் மற்றும் தம்பியுடன் வசித்து வருகிறார். பிரியா, தனக்கு முருகன் தான் ஒரே துணை என்று நினைத்து முருகனிடம் அடிக்கடி திருமணம் செய்யதுக்கொள்ளும்படி கூறியுள்ளார்.

முருகன் காலம் கடத்திக் கொண்டே வந்துள்ளார். இதனால் பயத்தில் பிரியா காவல் நிலையத்தில் சென்று இதுகுறித்து புகார் செய்துள்ளார். காவல் துறையினர் முருகன் மற்றும் அவரது குடும்பத்தினரை வரவழைத்து பேசியுள்ளனர்.

முருகன் பதிவு திருமணம் செய்துக் கொள்வதாக காவல் நிலையத்தில் கடிதம் எழுதி கொடுத்து உறுதிப்படுத்தியுள்ளார். பதிவு திருமணம் நடைபெற வேண்டிய நாளன்று பிரியா காத்திருக்க, முருகன் தொடர்பில் இல்லாமல் இருந்துள்ளார்.

பிரியா, முருகன் தன்னை ஏமாற்றி விட்டதாக நினைத்துள்ளார். ஆனால் முருகன் விஷம் குடித்து தற்கொலை செய்ய முயற்சித்துள்ளார். முருகனை அவரது குடும்பத்தினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இச்செய்தியை அறிந்த பிரியா மருத்துவமனைக்கு சென்று முருகனை சந்தித்துள்ளார். இதுகுறித்து காவல் துறையினர் விசாரணையில், திருமணத்தில் முருகனுக்கு விருப்பம் இல்லாததும், அவரை கட்டாயப்படுத்தி திருமணம் செய்ய பிரியா முயற்சித்ததாலும் மனம் உடைந்த அவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

மேலும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Share This:
Loading...

Related Posts

Loading...