உங்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக அமையுமா..? வாங்க தெரிஞ்சுக்கலாம் – இன்றைய ராசி பலன்கள் 02. 09. 2016

Share this post:

aaa

மேஷம்
குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். உறவினர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். அதிஷ்ட எண்:5அதிஷ்ட நிறங்கள்: கிரே, மஞ்சள்

ரிஷபம்
தடைகளை கண்டு தளரமாட்டீர்கள். அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். பழைய கடனைப் பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். தொழிலில் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவீர்கள். அதிஷ்ட எண்:3அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, ஊதா

மிதுனம்
குடும்பத்தாரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. சொத்து பிரச்னைக்கு சுமூக தீர்வு காண்பீர்கள். பேச்சில் முதிர்ச்சி தெரியும். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்யோகத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும். அதிஷ்ட எண்:7அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், கருநீலம்

கடகம்
குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். தோற்றப் பொலிவுக் கூடும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் தள்ளிப் போன ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்யோகத்தில் புது பொறுப்புகள் தேடி வரும். அதிஷ்ட எண்:9அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், கிரே

சிம்மம்
இரவு 8.00 மணி வரை ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் பல வேலைகளை இழுத்துப் போட்டு பார்க்க வேண்டி வரும். நண்பர், உறவினர்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். கோபத்தால் இழப்புகள் ஏற்படும். உங்கள் திறமையை நீங்களே குறைத்து மதிப்பிடாதீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களால் விரயம் வரும். உத்யோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும். அதிஷ்ட எண்:6அதிஷ்ட நிறங்கள்: வெள்ளை, மஞ்சள்

கன்னி
கணவன்-மனைவிக்குள் மனஸ்தாபம் வந்து நீங்கும். தாழ்வுமனப்பான்மை தலைத்தூக்கும். சொந்த-பந்தங்களால் பிரச்னைகள் வரக்கூடும். யாரையும் எடுத்தெறிந்து பேசாதீர்கள். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். உத்யோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். இரவு 8.00 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் தடைகளை தாண்டி முன்னேறுவீர்கள். அதிஷ்ட எண்:1அதிஷ்ட நிறங்கள்: ஊதா, இளஞ்சிவப்பு

துலாம்
குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். யோகா, தியானத்தில் மனம் லயிக்கும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். எதிராகப் பேசியவர்கள் வளைந்து வருவார்கள். வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். அதிஷ்ட எண்:4அதிஷ்ட நிறங்கள்: மயில் நீலம், ப்ரவுன்

விருச்சிகம்
தவறு செய்பவர்களை தட்டிக் கேட்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் தலைமையின் நம்பிக்கையை பெறுவீர்கள். அதிஷ்ட எண்:5அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, பச்சை

தனுசு
கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். அரைக்குறையாக நின்ற வேலைகள் முடிவடையும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில் சூட்சுமங்களை உணர்வீர்கள். அதிஷ்ட எண்:2அதிஷ்ட நிறங்கள்: பிங்க், க்ரீம் வெள்ளை

மகரம்
இரவு 8.00 மணி வரை சந்திராஷ்டமம் நீடிப்பதால் வேலைச்சுமையால் உடல் அசதி, மனச்சோர்வு வந்து நீங்கும். பிள்ளைகளை அவர்கள் போக்கில் விட்டுப் பிடியுங்கள். நீங்கள் சிலருக்கு நல்லது சொல்லப் போய் பொல்லாப்பாக முடியும். தர்மசங்கடமான சூழ்நிலைகளில் அவ்வப்போது சிக்கித் தவிப்பீர்கள். வியாபாரத்தில் அவசர முடிவுகள் வேண்டாம். உத்யோகத்தில் கூடுதலாக வேலைப் பார்க்க வேண்டி வரும். அதிஷ்ட எண்:8அதிஷ்ட நிறங்கள்: பிஸ்தா பச்சை, மஞ்சள்

கும்பம்
பிள்ளைகளின் விருப்பு, வெறுப்பை அறிந்து அதற்கேற்ப அவர்களை நெறிப்படுத்துவீர்கள். வாகனத்தை சரி செய்வீர்கள். தாயாரின் உடல் நிலை சீராகும். மனைவிவழியில் ஆதரவுப் பெருகும். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் மேலதிகாரி மதிப்பார். இரவு 8.00 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் எதிலும் நிதானத்துடன் செயல்பட வேண்டும். அதிஷ்ட எண்:1 அதிஷ்ட நிறங்கள்: மெரூண், வெள்ளை

மீனம்
எதிர்பாராத பணவரவு உண்டு. உங்களிடம் பழகும் நண்பர்கள், உறவினர்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் வெற்றி பெறுவீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் உங்களின் திறமையைக் கண்டு மேலதிகாரி வியப்பார். அதிஷ்ட எண்:9அதிஷ்ட நிறங்கள்: மயில்நீலம், பிங்க்

Share This:
Loading...

Related Posts

Loading...