ஆண்களே உங்களின் அழகுக்கு அழகு சேர்க்க வேண்டுமா..? – இத கொஞ்சம் முயற்சித்து பாருங்களன்..!

Share this post:

boy

இப்போது பெண்களோடு போட்டிபோட்டுக்கொண்டு ஆண்களும் சரும நிறத்தை மாற்ற அதிக ஆர்வம் காட்டுகின்றனர். இப்படி சிகப்பு நிறத்தின் மீது தீராத மோகம் கொண்டுள்ளவர்களுக்காக சில எளிய டிப்ஸ்….

* வேலை நிமித்தமாக வெளியில் சுற்றும் ஆண்களின் முகம் எளிதில் கருத்துவிடும். அவர்கள் ஐஸ் கட்டியை துணியில் கட்டி முகத்திற்கு ஒத்தடம் தர முகம் பொலிவடையும்.

* வெளியில் அலைவதனால் தலைமுடி உதிர்வதை தடுக்க நல்லெண்ணெய், விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய் ஆகிய மூன்றையும் கலந்து தலைக்கு தேய்த்து வர முடி உதிர்வது தடுக்கப்படும்.

* சிகரெட் குடித்து உதடு கருமையாக இருப்பவர்கள் மாதுளைச் சாறு, புதினா இலையை உதட்டில் தடவி வர உதடு செந்நிறமாகும்.

* சுத்தமான சந்தனத்தை பாதாம் எண்ணெய்யில் குழைத்து முகத்தில் பூசி, இந்த கலவை காய்ந்ததும் முகத்தை கழுவலாம்.

* தக்காளியை நன்றாக பிசைந்து அதனோடு 4 – 5 துளிகள் எலுமிச்சை சாறு கலந்து முகம், கழுத்து பகுதி, கைகளில் பூசிக்கொள்ளலாம்.

* முகத்தை கழுவியபிறகு சிறிதளவு பாலை உள்ளங்கையில் எடுத்து முகத்தில் பூசவும். இவ்வாறு தொடர்ந்து 2 – 3 வாரங்கள் வரை செய்துவந்தால் உங்கள் சருமம் பொலிவடைந்திருப்பது கண்கூடாக தெரியும்.

* சிறிதளவு இளநீரை முகம், கழுத்து பகுதி, கைகளில் பூசிவந்தால் சரும நிறம் மாறும்.

* சீரகம் மற்றும் முள்ளங்கியை ஆகியவற்றை தனித்தனியே தண்ணீரில் கொதிக்கவைத்து, அந்த தண்ணீரில் முகத்தை கழுவினால் மாசுகள் அகற்றப்பட்டு முகம் பிரகாசமாக தோன்றும்.

* புதினா மற்றும் எலுமிச்சை சாறுகளை கலந்து முகத்தில் தடவலாம்

* முட்டையின் வெள்ளை கருவை வாரம் இருமுறை முகத்தில் பூசிவந்தால் சரும நிறம் சிகப்பாக மாறுவதோடு மிருதுவாகவும் மாறும்.

* அன்னாசி பழத்தின் சாறு, தர்பூசிணி மற்றும் பப்பாளி பழ சாறுகளும் சரும நிறத்தை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

Share This:
Loading...

Recent Posts

Loading...