ஒரு வருடமாக சிறுமி ஒருவருக்கு மதுபானத்தை கொடுத்து பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய 11 பேர்! – இலங்கையில் சோகம்…!

Share this post:

ch

13 வயதான சிறுமியை ஒரு வருடத்திற்குள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய 11 சந்தேக நபர்களை கைது செய்வதற்காக பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

மாவனெல்லை பிரதேசத்தில் கடந்த வருடம் நடைபெற்ற இசை நிகழ்ச்சி ஒன்றின் போது சிறுமி முதல் முறையாக பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

இனந்தெரியாத நபர்கள் சிறுமியை விடுதி ஒன்றில் அழைத்துச் சென்று மதுபானத்தை கொடுத்து வல்லுறவுக்கு உட்படுத்திய பின்னர், இசை நிகழ்ச்சி நடந்த இடத்தில் விட்டுச் சென்றுள்ளனர்.

இதன் பின்னர் அங்கிருந்த சிலரும் சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளனர்.

சிறுமி மயங்கிய நிலையில் விழுந்து கிடந்ததாகவும் பின்னர், அவர் மாவனெல்லை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

சிறுமி மதுபானம் அருந்தும் பழக்கத்திற்கு அடிமையானவர் என அறியப்பட்டதால், இளைஞர்கள், சிறுமிக்கு மதுபானத்தை கொடுத்து அடிக்கடி துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி வந்துள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கடந்த வருடத்தில் இருந்து இதுவரை 11 பேர் சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளதாக பொலிஸார் கண்டறிந்துள்ளனர்.

சிறுமி வழங்கிய தகவல்களுக்கு அமைய 6 சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளதுடன் அவர்களை மாவனெல்லை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த உள்ளனர். சம்பவம் தொடர்பில் அரநாயக்க பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share This:
Loading...

Related Posts

Loading...