தரம் குறைந்த தலைக்கவசங்களுக்குத் (கெல்மட்) தடை – இன்று முதல் கட்டாய அமுல்..!

Share this post:

hel

இலங்கை தர நிர்ணயம் கொண்ட மோட்டார் சைக்கிள் தலைக்கவசங்கள் இன்று முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாகன விபத்துக்களால் ஏற்படும் மரணங்களை குறைக்கும் நோக்குடன் இந்த சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக நுகர்வோர் சேவை அதிகாரிகளின் தலைவர் ஹசித திலகரத்ன தெரிவித்துள்ளார்.

இந்த சட்டமானது பல வருடங்களுக்கு முதலே வர்த்தமானி மூலம் வெளியிடப்பட்டதாகவும், தலைக்கவசம் அணியாமல் நாளொன்றிட்கு 7 அல்லது 8 மரணங்கள் சம்பவிப்பதாகவும் தெரிவித்துள்ள அவர், இதன் காரணமாகவே தர நிர்ணயம் கொண்ட தலைக்கவசங்களை மோட்டார் சைக்கிள் செலுத்துபவர்கள் பயன்படுத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய இலங்கைத் தர நிர்ணய சான்றிதழ் அல்லாத தலைக்கவசங்கள் விற்பனை தடை செய்யப்பட்டுள்ளதாகவும் இன்று முதல் அவ்வாறான தலைக்கவசங்களை விற்பனை செய்யும் வர்த்தக நிலையங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேநேரம் தரம் குறைந்த தலைக்கவசங்களை அணிவதும் தடை செய்யப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது…

Share This:
Loading...

Related Posts

Loading...