சுவாதி கொலையை விட மோசமான சம்பவம், கல்லூரி மாணவி அடித்து கொலை – வீடியோ!!!

Share this post:

maana

தமிழகத்தின் கரூர் அருகே உள்ள தனியார் பொறி யியல் கல்லூரியில் வகுப்பறைக் குள் புகுந்து மாணவியை கட்டை யால் அடித்துக் கொன்ற முன்னாள் மாணவர் கைது செய்யப்பட்டார்.

சிவகங்கை மாவட்டம், மானா மதுரையைச் சேர்ந்த கண்ணன் என்பவரது மகள் சோனாலி(19). கரூர் அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் சோனாலி 3-ம் ஆண்டு படித்து வந்தார்.

ராமநாதபுரம் மாவட்டம், பரமக் குடி அருகே உள்ள வெங்க ளூரைச் சேர்ந்தவர் உதயகுமார்(21). இதே கல்லூரியில், கடந்த கல்வி ஆண்டில் 3-ம் ஆண்டு படித்த வந்த இவர், சோனாலியை ஒரு தலையாகக் காதலித்ததாகக் கூறப் படுகிறது. ஆனால், சோனாலி அவரது காதலை ஏற்கவில்லை. இதற்கிடையே, கடந்த நவம்பர் முதல் உதயகுமார் கல்லூரிக்கு வரவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று கல்லூ ரிக்கு வந்த உதயகுமார், வகுப் பறையில் இருந்த சோனாலியைச் சந்தித்து பேசியுள்ளார். அப்போது ஏற்பட்ட தகராறில், அங்கு கிடந்த கட்டையால் சோனாலியின் தலை யில் உதயகுமார் தாக்கியுள்ளார். தடுக்க வந்த சக மாணவர்களையும் தாக்கிவிட்டு, அங்கிருந்து அவர் தப்பி ஓடிவிட்டார்.

இதில், பலத்த காயமடைந்த சோனாலியை அங்கு இருந்தவர் கள் மீட்டு, கரூர் தனியார் மருத்துவ மனையில் சேர்த்தனர். மதுரை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சோனாலி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதுகுறித்து கரூர் நகர போலீஸார் வழக்கு பதிவு செய்து உதயகுமாரை கைது செய்தனர். இந்த சம்பவம் கரூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Share This:
Loading...

Related Posts

Loading...