வகுப்பறையில் வைத்து மாணவியை அடித்துக்கொலை செய்த மாணவன்…!

Share this post:

msaa

பொறியியல் கல்லூரியில் 3ம் ஆண்டு சிவில் பாடம் படித்து வந்தார் சோனாலி. இன்று வழக்கம் போல கல்லூரி வகுப்பறையில் அமர்ந்திருந்தார் சோனாலி.

அப்போது வகுப்பறைக்குள் கட்டையுடன் நுழைந்த அதே கல்லூரியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட உதயகுமார் என்ற மாணவர் திடீரென தாக்கி அடித்துள்ளார்.

இதில் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார் சோனாலி. அவர் உடனடியாக கரூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பின்னர், அங்கிருந்து மதுரை அண்ணாநகரில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

அங்கு சிகிச்சை பலனின்றி சோனாலி உயிரிழந்தார்.

மாணவியை தாக்கிவிட்டு தப்பியோடிய உதயகுமாரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்தச் சம்பவத்தையடுத்து கரூர் பொறியியல் கல்லூரிக்கு 2 நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Share This:
Loading...

Related Posts

Loading...