சிக்கலாகும் தனுஷ் – அமலாபால் விவகாரம்..?

Share this post:

tha

நடிகை அமலா பால், இயக்குனர் விஜய் தம்பதியினர் விவாகரத்துக்கு சென்றுள்ள நிலையில், தனுஷ் நடிக்க இருக்கும் வட சென்னை படத்தில் அமலா பாலுக்கு வாய்ப்பு அளிக்கப்பட கூடாது என தனுஷின் மனைவி கூறியும், அதை மதிக்காமல் அவர் வாய்ப்பு வழங்கியதால், இந்த பஞ்சாயத்து ரஜினியிடம் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

தனுஷ் தயாரிப்பில் உருவான அம்மா கணக்கு திரைப்படத்தில் அமலா பால் நடிக்கும் போதே அமலா பால், இயக்குனர் விஜய் உறவில் விரிசல் ஏற்பட்டு தற்போது விவாகரத்து வரை சென்றுவிட்டது. இந்த விரிசலுக்கு நடிகர் தனுஷும் காரணம் என கிசுகிசுக்கப்பட்டது. இந்நிலையில் இயகுனர் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், விஜய் சேதுபதி, அமலா பால், ஆண்ட்ரியா ஆகியோர் வட சென்னை என்ற படத்தில் நடிக்க உள்ளனர்.

இந்த படத்தில் அமலா பாலுக்கு வாய்ப்பு வழங்க கூடாது என தனுஷின் மனைவியும் ரஜினிகாந்தின் மகளுமான ஐஸ்வர்யா கூறியதாக பேசப்பட்டது. இந்நிலையில் மூன்று பாகங்களாக எடுக்கப்பட உள்ள இந்த படத்தில் அமலா பால் மீனவ பெண்ணாக நடிக்க உள்ளார். இதில் அவருக்கு ஹீரோயினுக்கு நிகரான முக்கியமான வேடமாம்.

இதனால் தான் சொல்லியும் கேட்காமல் அமலா பாலுக்கு தனுஷ் வாய்ப்பு வழங்கியதால் இந்த பஞ்சாயத்தை ஐஸ்வர்யா அவரது தந்தை ரஜினிகாந்திடம் கொண்டு சென்றுள்ளதாக கிசுகிசுக்கப்படுகிறது.

Share This:
Loading...

Recent Posts

Loading...