இப்படியும் ஒரு பெண்ணா…? – இளைஞனை மிரட்டி உறவு: முதல் முறையாக வழக்கு பதிவு.!

Share this post:

VVV

16 வயது இளைஞன் ஒருவனை 23 வயது பெண் ஒருவர் கட்டாயப்படுத்தி உடலுறவு கொண்டதாக போஸ்கோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பெண் ஒருவர் மீது போஸ்கோ சட்டத்தின் கீழ் இந்தியாவின் உத்தரப்பிரதேசத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது இதுவே முதல் முறையாகும்.

தன்னை அந்த பெண் மிரட்டி உடலுறவு வைத்துக் கொண்டதாகவும், திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தியதாகவும் அந்த 16 வயது இளைஞர் புகார் அளித்தார். இதனையடுத்து, அந்த 23 வயதான பெண் மீது போஸ்கோ சட்டத்தின் கீழ், மைனர் மீது பாலியல் அத்துமீறல், கொன்று விடுவதாக மிரட்டுவது போன்ற குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இது குறித்து கூறிய பொலிஸார், குற்றம் சுமத்தப்பட்ட அந்த பெண் வீடியோ ஒன்றை வைத்துக்கொண்டு, அந்த இளைஞனை மிரட்டி உடலுறவு வைத்துக் கொண்டார், திருமணம் செய்துகொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளார். இதற்கு அந்த இளைஞர் மறுப்பு தெரிவித்ததாக கூறினர்.

Share This:
Loading...

Related Posts

Loading...