இன்றைய நாள் உங்களுக்கு இனிய நாளாக அமையுமா படித்து தெரிஞ்சுக்குங்க – இன்றைய ராசிபலன்கள் 31. 08. 2016…

Share this post:

aaa

மேஷம்
எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். தாயாருடன் வீண் விவாதங்கள் வந்து நீங்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. வியாபாரத்தில் உங்கள் கொள்கைகளில் சில மாற்றம் செய்வீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரி உங்களை முழுமையாக நம்புவார். அதிஷ்ட எண்: 1அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், கிளிப்பச்சை

ரிஷபம்
குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து பழைய பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டு. சொந்த-பந்தங்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். மற்றவர்களுக்காக சில செலவுகளை செய்து பெருமைப்படுவீர்கள். வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை தாண்டி முன்னேறுவீர்கள். அதிஷ்ட எண்: 7அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, ஊதா

மிதுனம்
கணவன்-மனைவிக்குள் இருந்த மோதல்கள் நீங்கும். தள்ளிப் போன விஷயங்கள் உடனே முடியும். உறவினர்களால் ஏற்பட்ட பிரச்னைக்கு தீர்வு காண்பீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். உத்யோகத்தில் அதிகாரிகள் உங்களுக்கு முன்னுரிமை தருவார்கள். அதிஷ்ட எண்: 9அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், வெளீர் நீலம்

கடகம்

காலை 11.30 மணி வரை ராசிக்குள் சந்திரன் இருப்பதால் திட்டமிடாத செலவுகளும், பயணங்களும் குறுக்கீட்டாலும் சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். நண்பர்கள், உறவினர்கள் உங்களிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்வார்கள். வெளிவட்டாரத்தில் நிதானம் அவசியம். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். அதிஷ்ட எண்: 5அதிஷ்ட நிறங்கள்: மிண்ட் கிரே, வைலெட்

சிம்மம்
காலை 11.30 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் குடும்பத்தினரை அனுசரித்துப் போங்கள். வாகனத்தில் அதிக வேகம் வேண்டாம். சகோதர வகையில் சங்கடங்கள் வரும். சொத்துப் பிரச்னைக்கு சுமூக தீர்வு காண்பது நல்லது. வியாபாரம் சுமாராக இருக்கும். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் பனிப்போர் வந்து நீங்கும். அதிஷ்ட எண்: 8அதிஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, நீலம்

கன்னி
கடந்த கால இனிய அனுபவங்களை நினைவுக்கூர்ந்து மகிழ்வீர்கள். பெற்றோரின் ஆதரவுப் பெருகும். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். சகோதரி உதவுவார். புதியவர்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் போட்டிகளை எதிர்கொண்டு வெற்றி காண்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களால் சங்கடங்கள் வரும். அதிஷ்ட எண்: 6அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, கிரே

துலாம்
உணர்ச்சிப்பூர்வமாகப் பேசுவதை விட்டு அறிவுப் பூர்வமாக செயல்படுவீர்கள். திடீர் முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகள் நம்பிக்கை தருவார்கள். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டும்படி நடந்துக் கொள்வீர்கள். அதிஷ்ட எண்: 4அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், கிளிப் பச்சை

விருச்சிகம்
மன உளைச்சல் நீங்கி எதிலும் ஒரு தெளிவு பிறக்கும். குடும்பத்தில் நிம்மதி உண்டு. எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். அதிஷ்ட எண்: 3அதிஷ்ட நிறங்கள்: வெளிர் மஞ்சள், ப்ரவுன்

தனுசு
காலை 11.30 மணி வரை சந்திராஷ்டமம் நீடிப்பதால் எந்த காரியத்தை தொட்டாலும் இரண்டு, மூன்று முறை முயன்று முடிக்க வேண்டி சூழ்நிலை உருவாகும். மற்றவர்களுடன் உங்களை ஒப்பிட்டுக் கொண்டிருக்காதீர்கள். உங்களின் தனித்தன்மையையே பின்பற்றுவது நல்லது. வர வேண்டிய பணத்தை போராடி வசூலிப்பீர்கள். வியாபாரத்தில் பற்றுவரவு சுமார்தான். உத்யோகத்தில் மேலதிகாரி ஆதரிப்பர். அதிஷ்ட எண்: 1அதிஷ்ட நிறங்கள்: ஆலிவ் பச்சை, வெள்ளை

மகரம்
காலை 11.30 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் கணவன்-மனைவிக்குள் ஆரோக்யமான விவாதங்கள் வந்துப் போகும். தாய்வழி உறவினர்கள் மதிப்பார்கள். பயணங்களால் பயனடைவீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்யோகத்தில் உங்களைப் பற்றி வதந்திகள் வரும். அதிஷ்ட எண்: 2அதிஷ்ட நிறங்கள்: அடர் சிவப்பு, இளம் மஞ்சள்

கும்பம்
குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். வாகனத்தை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். அதிஷ்ட எண்: 4அதிஷ்ட நிறங்கள்: ஊதா, ரோஸ்

மீனம்
புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்யோகம் குறித்து யோசிப்பீர்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கவர சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்யோகத்தில் சில புதுமைகளைச் செய்து எல்லோரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள். அதிஷ்ட எண்: 6அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், கிரே

Share This:
Loading...

Related Posts

Loading...