குழந்தை பெற்றெடுத்த 5-ஆம் வகுப்பு பாடசாலை மாணவி- அதிர்ச்சியில் உறைந்த பெற்றோர் – காரணம் யார் தெரியுமா..?

Share this post:

kaara

பள்ளியில் 5-ஆம் வகுப்பு படித்து வந்த பள்ளி மாணவி ஒருவர் குழந்தை பெற்றெடுத்தது ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் உள்ள பழங்குடியினர் உண்டு உறைவிட பள்ளியில் 5-ஆம் வகுப்பு படித்து வந்த மலைவாழ் ஆதிவாசி பிரிவை சேர்ந்த மாணவி ஒருவர் கடந்த 25ம் தேதி வழக்கம் போல பள்ளிக்கு வந்திருந்தார்.

பள்ளிக்கு வந்த மாணவிக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டதால் பள்ளி ஊழியர்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். மருத்துவமனையில் அந்த மாணவிக்கு பெண் குழந்தை பிறந்தது. பிரசவம் ஆகும் வரை மாணவியின் உடலில் எந்தவிதமான மாற்றமும் தென்படவில்லை. இதனால் அவர் கர்ப்பமாக இருந்ததும் யாருக்கும் தெரியவில்லை.

குழந்தை பெற்ற இந்த 5-ஆம் வகுப்பு மாணவி இடையில் பள்ளியை விட்டு நின்று 2 வருட இடைவெளிக்கு பின்னர் மீண்டும் படிக்க வந்தவர். மாணவி கர்ப்பமாகி குழந்தை பெற காரணம் அவரது மாமாதான் என்று கூறப்படுகிறது. காவல்துறையில் இது குறித்து புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Share This:
Loading...

Related Posts

Loading...