நீங்கள் உங்கள் மனைவிக்கு சிறந்த கணவனாக திகழ வேண்டுமா ? இதை கொஞ்சம் படியுங்கள்……….

Share this post:

wi

இலங்கை கிரிக்கெட் அணி வெற்றிபெற வேண்டும் என்றால், 11 ஆட்டக்காரர்களும் சிறந்த வெளிப்பாட்டை கொண்டுவர வேண்டும். அதே போல தான் இல்லறம் நல்லறமாக சிறந்து விளங்க வேண்டும் என்றால் கணவன், மனைவி, பிள்ளைகள் என அனைவரும் சிறந்து செயல்பட வேண்டும்.

கணவன் மட்டும் சிறந்து செயலாற்றினாலோ, மனைவி மட்டும் சிறந்து செயலாற்றினாலோ, இல்லறம் சிறந்துவிடாது. முக்கியமாக கணவன். நீங்கள் ஓர் சிறந்த கணவனாக இருக்க வேண்டும் என்றால் இந்த ஏழு செயல்களில் சிறந்து விளங்க வேண்டும்…

மன்னிப்பு!
நான் ஒரு ஆண், நான் அடக்கி ஆள்பவன், ஆளப்பிறந்தவன் என பிதற்றாமல். ஆண், பெண் இருவரும் நிகர் என்பதை உணர்ந்து. தவறு செய்தால் தயங்காமல் மன்னிப்பு கேட்கும் குணம் கொண்டிருக்க வேண்டும்.

கடமை!
பொண்டாட்டி அதை வாங்கி தர சொல்கிறார், இதை கேட்கிறார் என அடம் பிடிக்காமல். நீங்கள் செய்ய வேண்டிய கடமையை செம்மையாக செய்ய வேண்டும். ஆடம்பரத்தை தவிர்துவிடுங்கள். ஆனால், அத்தியாவசியத்தை பூர்த்தி செய்யுங்கள்.

பார்வை!
ஆண்களின் பார்வையும், பெண்களின் பார்வையும் வெவ்வேறு கோணம் கொண்டவை. ஆனால், சிறந்த இல்லறத்திற்கு இருவரது பார்வையும் தேவையானது. எனவே, எந்த காரியமாக இருந்தாலும், அவர்களது பார்வையையும் ஒருமுறை கேட்டு ஆலோசித்து செயல்படுத்து முயலுங்கள்.

அக்கறை!
உங்களை மட்டுமே நம்பி வந்திருக்கும் அவருக்கு முன்னுரிமை அளியுங்கள். தவறு செய்தாலும், மன்னித்து, மதிக்க கற்றுக் கொள்ளுங்கள். நொட்டை பேச்சு மட்டும் பேசி புண்படுத்த வேண்டாம்.

அரவணைப்பு!
ஒருவருக்கு ஒருவர் சிறந்த துணையாக விளங்க வேண்டும் என்று தினமும் காலை உறுதிமொழி எடுத்துக் கொள்ளுங்கள். அரவணைக்க ஒருபொழுதும் மறக்க வேண்டாம்.

எண்ணங்கள்!
உங்கள் எண்ணங்கள் எப்போதும் இனிமையாக இருக்க வேண்டும். சோகங்கள் வந்தால் துவண்டு போய்விட வேண்டாம். இன்பத்தில் துள்ளி குதித்து கீழே விழுந்து காயமடையவும் வேண்டாம். மனநிலையை சமநிலையில் வைத்துக் கொள்ள பழகுங்கள்.

நன்றி!
தாலி கட்டிய ஓர் கடமைக்காக உங்களுக்கு வேளாவேளைக்கு சமைத்துக் கொட்டி, உங்கள் உள்ளாடை முதற்கொண்டு அனைத்தையும் முகம்சுளிக்காமல் துவைத்து போடும். அவர் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் சிறிது, பெரிது என்று பாராமல், நன்றி கூற பழகுங்கள்.

Share This:
Loading...

Recent Posts

Loading...