ஒரே நாளில் ஐந்து வீடுகளில் கைவரிசையை காட்டிய பலே திருடன்..!

Share this post:

thi
அக்கரபத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லோவர் கிரன்லி தோட்டத்தில் ஐந்து வீடுகளில் (27) அன்று நள்ளிரவு பெறுமதியான தங்க நகைகள் மற்றும் பணம் என்பன கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக சம்பந்தப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

குறித்த திருட்டு சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது,

இத்தோட்டத்தில் இடம்பெற்ற இரண்டு திருமண வீடுகளிலும், ஒரு பூப்பனித நீராட்டு விழா வீட்டிலும் மற்றும் அருகிலுள்ள இரண்டு வீடுகளும் உடைக்கப்பட்டே கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.

இதன்போது, சம்மந்தப்பட்ட சந்தேக நபர்களின் கத்தி, குடை மற்றும் பாதனிகளை கொள்ளையர்கள் அவ்விடத்திலேயே விட்டு சென்றுள்ளனர்.

இதன்காரணமாக தோட்ட மக்கள் மத்தியில் அச்ச நிலை தோன்றியுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்கரப்பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share This:
Loading...

Related Posts

Loading...