வைத்திய பரிசோதனைக்கு சென்ற பெண்ணை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்படுத்திய மருத்துவர் -இலங்கையில் சோகம்..!

Share this post:

hos

மருத்துவ பரிசோதனைகுச் சென்ற பெண்னை சட்டவிரோதமான முறையில் வல்லுறவுக்குட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகளை நடத்துமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் பாலித்த மஹிபால உத்தரவிட்டுள்ளார்.

பாலித்த மஹிபால,கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலை பணிப்பாளருக்கு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரி அலுவலகத்தில் உள்ள மருத்துவர் ஒருவர் மூலமே குறித்த பெண் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் விரைவில் விசாரணைகளை முன்னெடுக்குமாறு சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன வைத்தியர் பாலித்த மஹிபாலவிடம் அறிவித்துள்ளார் என சுகாதார அமைச்சு கூறியுள்ளது.

இதற்கு இணங்கவே இந்த சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்துமாறு கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் அசேல குணவர்தனவிடம் பாலித்த உத்தரவிட்டுள்ளார்.

Share This:
Loading...

Related Posts

Loading...