4 வயது சிறுவனை கழுத்து அறுத்து கொலை செய்த பெண் – காரணம் தெரியுமா அதிர்ச்சியாகிடுவீங்க…?

Share this post:

ku

கடலூர் மாவட்டத்தில் சமீபத்தில் 4 வயது சிறுவன் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்த சம்பவத்தில் பக்கத்து வீட்டு பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடலூர் மாவட்டத்தில் திட்டக்குடி பகுதியைச் சேர்ந்த முருகேசன் என்பவரின் மகன் ரித்தீஷ் (4) கடந்த 23 ஆம் திகதி அவரது வீட்டின் பின்புறம் பிளேடால் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்தார்.

இதையறிந்த அப்பகுதி பொலிசார் சம்பவ இடத்திற்கு விரந்து சென்று சிறுவன் ரித்திஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டதில், முருகேசனின் பக்கத்து வீட்டு பெண் பரமேஸ்வரி என்பவர் வேறு ஒரு ஆணுடன் தகாத உறவு வைத்துக் கொண்டதை, முருகேசன் கண்டித்ததாகவும், இதுகுறித்து கிராம மக்களிடம் கூறியதாகவும் தெரிகிறது.

இதனால் ஆத்திரமடைந்த பரமேஸ்வரி, முருகேசனை பழிவாங்க அவரது மகன் நித்திஷை பிளேடால் கழுத்தறுத்து கொலை செய்தது தெரியவந்துள்ளது.

இது குறித்து, பொலிசார் கூறியதாவது, காவல்துறையிடம் பிடிபட்டு விடுவோம் என்ற பயத்தில் பரமேஸ்வரி தற்கொலைக்கு முயன்றதை வைத்து இவ்வழக்கில் துப்பு துலங்கியதாக போலீசார் தெரிவித்தனர்.

Share This:
Loading...

Related Posts

Loading...