நல்லூர் போறீங்களா..? உங்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு…!

Share this post:

nalu

யாழ்பாணம் நல்லுார் வருடாந்த கொண்டாட்டத்தை முன்னிட்டு ஆலயத்திற்கு செல்லும் யாத்திரீகர்களின் நலனுக்காக இலங்கை புகையிரத திணைக்களம் சிறப்பு வாய்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது.

புகையிரதம் மூலம் பயணிக்கும் பக்தர்களின் நலன் கருதி புகையிரதத்தின் முதல் வகுப்பில் குளிரூட்டப்பட்ட பெட்டி சேர்க்கப்பட்டுள்ளதாக இலங்கை புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

காங்கேசன் துறையில் இருந்து கல்கிசை இடையே பயணிப்பவர்கள் மற்றும் கல்கிசையில் இருந்து காங்கேசன் துறையில் பயணிக்கும் புகையிரதங்களுக்கு மாத்திரமே இந்த சிறப்பு வாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த சேவை ஆகஸ்ட் 30 முதல் செப்டம்பர் 01 வரையில் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் இலங்கை புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share This:
Loading...

Related Posts

Loading...