யாழில் இருந்து கனடா செல்ல சென்றவர்களுக்கு வழியில் நிகழ்ந்த சோகம்..!

Share this post:

ca

புத்தளம்-அனுராதபுரம் வீதியில் பயணித்துக் கொண்டிருந்த வேன் ஒன்று மீது காட்டு யானை நடத்திய தாக்குதலில் ஒருவர் பலியாகியுள்ளதுடன் 10 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

குறித்த சம்பவம் மீஓயா பாலத்திற்கு அருகில் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது.

மேலும், படுகாயமடைந்தவர்களில் இரண்டு பெண்கள் உள்ளடங்குவதுடன் சிகிச்சைக்காக இவர்களை புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

இதேவேளை, யாழ்பாணம்,பருத்தித்துறையை சேர்ந்த 39 வயதுடைய நபரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

இவர்கள் கனடாவிற்கு செவல்வதற்காக விமான நிலையத்திற்கு பயணித்துக் கொண்டிருந்த போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

Share This:
Loading...

Related Posts

Loading...