3 மாதங்களுக்கு மூடப்படுகிறது கொழும்பு விமான நிலையம்..!

Share this post:

vimaa

தலைநகர் கொழும்பில் பண்டாரநாயகா சர்வதேச விமான நிலையம் உள்ளது.

அங்கிருந்து தினசரி 185 விமானங்கள் இயக்கப்படுகின்றன.

அங்குள்ள ஓடுபாதையை பழுதுபார்க்கும் பணி மேற்கொள்ளப்பட உள்ளது.

இதற்காக, அடுத்த ஆண்டு ஜனவரி 6-ந்தேதி முதல் ஏப்ரல் 6-ந்தேதிவரை நாள்தோறும் காலை 8.30 மணி முதல் மாலை 4.30 மணிவரை விமான நிலையம் மூடப்படுகிறது.

இத்தகவலை இலங்கை விமான போக்குவரத்து மந்திரி நிமல் சிறிபாலா டி சில்வா தெரிவித்தார்.

விமான சேவை நேரத்தை மாற்றி அமைத்துக் கொள்ளும்வகையில், அனைத்து விமான நிறுவனங்களுக்கும் இதை தெரிவித்து விட்டதாகவும் அவர் கூறினார்.

எனவே, 3 மாத காலமும், குறிப்பிட்ட 8 மணி நேரத்தில், எந்த விமானமும் தரை இறங்கவோ, புறப்படவோ செய்யாது.

மேற்கண்ட 3 மாத காலமும் சென்னை, திருச்சி, கொச்சி, பெங்களூரு, சிங்கப்பூர், மாலே ஆகிய நகரங்களுக்கான ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸ் விமானங்கள் ரத்து செய்யப்படுவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

இதுபோல், மற்ற விமான நிறுவனங்களும் தங்கள் விமான சேவையை மாற்றி அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன.

Share This:
Loading...

Related Posts

Loading...