ஒலிம்பிக் பதக்கம் வெல்லவில்லையா? அனைத்து வீரர்களையும் சுரங்க தொழில் கூலி வேலைக்கு அமர்த்த உத்தரவு ஒருவருக்கு மரண தண்டனை – அதிபரின் அதிரடி உத்தரவு…! எந்த நாடு தெரியுமா..?

Share this post:

gi

ரியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லாத வீரர்களின் ரேசன் கார்டுகளை பறிமுதல் செய்ய வடகொரியா அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

நடந்து முடிந்த ரியோ ஒலிம்பிக்கில் வடகொரியா 2 தங்கப்பதக்கங்கள் உட்பட 7 பதக்கங்கள் வென்றுள்ளது.

வடகொரியா அதிபர் கிம் ஜோங் குறைந்த பட்சமாக ஐந்து தங்கப்பதக்கமாவது வெல்ல வேண்டும் என வீரர்களுக்கு அறிவுரை வழங்கியதாக கூறப்படுகிறது.

மேலும் தென் கொரியா 9 தங்கப்பதக்கங்கள் உட்பட 21 பதக்கங்களுடன் வடகொரியாவை விட பதக்கப்பட்டியலில் முன்னிலையில் உள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த வடகொரியா அதிபர், தங்கம் வெல்லாத வீரர்களின் ரேஷன் கார்டுகளை பறிமுதல் செய்யவும், சுரங்க தொழில் கூலி வேலைக்கு அனுப்பவும் கிம் ஜோங் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் ஒலிம்பிக் போட்டியில் வடகொரியா ஜிம்னாஸ்டிக் வீராங்கனை ஹோங் உன்-ஜோங், தென்கொரிய விராங்கனையுடன் செல்பி புகைப்படம் எடுத்துள்ளார்.

இது அதிபருக்கு தெரிய வர எதிரி நாட்டு வீராங்கனையுடன் புகைப்படம் எடுத்துள்ளதால் அவருக்கு மரணதண்டனை கூட விதிக்கப்படும் என தெரிகிறது.

Share This:
Loading...

Related Posts

Loading...