டீசல் உற்பத்திக்கான வரி அதிகரிப்பு..! டீசல் விலை அதிகரிக்கிறதா..? விபரம் உள்ளே..

Share this post:

desa

வாயு எண்ணெய் மற்றும் டீசல் ஆகியவற்றுக்கான உற்பத்தி வரி அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

நிதி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் இது தொடர்பாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி ஒரு லீற்றருக்கு 03 ரூபா ஆக இருந்த உற்பத்தி வரி 13 ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளது.

ஓகஸ்ட் மாதம் அதிகரிக்கப்பட்ட வரி அதிகரிப்பின் பிரகாரமே இதன் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

எவ்வாறாயினும், இந்த வரி அதிகரிப்பினால் டீசல் விலையில் அதிகரிப்பு ஏற்படாது என்றும் நிதி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

எனினும் நிதி அமைச்சின் இந்த தான்தோன்றித்தனமான வரி அதிகரிப்புக்கு தனது எதிர்ப்பை தெரிவிப்பதாக பெற்றோலிய வள அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார்.

இதேவேளை, குறித்த வரி அதிகரிப்பு தொடர்பில் தனக்கு அறிவிக்கவில்லை என்றும் அமைச்சர் சந்திம வீரக்கொடி மேலும் தெரிவித்துள்ளார்.

Share This:
Loading...

Related Posts

Loading...