நிர்வாணமாக நீச்சலிட்டவருக்கு நேர்ந்த விபரீதம்: பதம் பார்த்த மீனவரின் தூண்டில்

Share this post:

rive

ஏரி ஒன்றில் நீச்சலிட்டவரின் மர்ம உறுப்பில் மீனவரின் தூண்டில் சிக்கி விபத்துக்குள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜேர்மனியில் பாவரியான் ஏரியில் நீச்சலிட்டு குளித்துக்கொண்டிருந்த நபருக்கு திடீரென்று வலி உணர்வு ஏற்பட்டுள்ளது. முதலில் மீன் என கருதியவருக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் இருந்தது அந்த சம்பவம்.

அந்த நபரின் மர்ம உறுப்பில் மீனவரின் தூண்டில் சிக்கியுள்ளது. இதனால் உயிர்போகும் வலியில் துடித்த அந்த நபரை உடனடியாக மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

Bavarian ஏரியில் குறிப்பிட்ட பகுதியில் நிர்வாணக்குளியலுக்கு அனுமதி வழங்கியுள்ளனர். இதனால் பெரும்பாலும் குறிப்பிட்ட நேரத்தில் அங்கு ஆண்கள் நிர்வாண குளியலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் பெயர் வெளிப்படுத்தாத அந்த நபர் குறிப்பிட்ட பகுதியில் நீச்சலிட்டு குளித்து வந்துள்ளார். திடீரென்று அவரது உறுப்பில் எதுவோ கவ்வியது போன்ற உணர்வு ஏற்பட்டதாக அவர் கூறியுள்ளார்.

தொடர்ந்து சுற்றும் பார்வையிட்ட அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அவரது அருகாமையில் ஒருபக்கம் மீனவர் ஒருவர் தூண்டிலிட்டு மீன் பிடித்துக்கொண்டு இருந்துள்ளார்.

இதனையடுத்து அந்த மீனவருக்கு எச்சரிக்கை செய்துவிட்டு அவர் இருக்கும் திசை நோக்கி இவர் நீச்சலிட்டு சென்றுள்ளார். கரை சேர்ந்த அவருக்கு மீண்டும் அதிர்ச்சி காத்திருந்தது.

அவரது மர்ம உறுப்பில் சிக்கிய தூண்டிலை அவரால் அகற்ற முடியாமல் போனது. இதனையடுத்து அந்த மீனவர் தனது கத்தியால் தூண்டிலின் ஒருபகுதியில் கட்டப்பட்டிருந்த இழையை துண்டித்தார்.

பின்னர் அந்த நபரை தனது மிதிவண்டியில் அமர்த்தி அவரது வீட்டிற்கு கொண்டு சேர்த்தார். வீட்டில் சேர்ந்ததுதான் தாமதம் உடனடியாக அந்த நபர் தமது காரை கிளப்பிக்கொண்டு மருத்துவமனைக்கு விரைந்தார்.

மருத்துவமனையில் வைத்து அந்த தூண்டிலை அகற்றியதுடன் காயங்களுக்கும் கட்டுப்போடும் நிலை ஏற்பட்டது. ஆனால் அந்த நபருக்கு அடுத்த ஒரு வார காலம் நீச்சலிட மட்டுமல்ல குளிக்கவே தடை விதித்துள்ளார் மருத்துவர்.

Share This:
Loading...

Recent Posts

Loading...