அகதி என்ற அடையாளமே ஒரு அழுக்கு !! அந்த அடையாளத்துடன் வாழ்ந்து கொண்டு திருடுவது தப்பு என்று கூறினால் கோபமடைகின்றார்கள் !! மீண்டும் மீண்டும் ஈழத்தமிழர்களை சீண்டும் சேரன் … !!

Share this post:

seran

எனது கருத்தில் எந்த தவறும் இல்லை . எதிரிகளே இதனை ஊதிப்பெருப்பிக்கின்றார்கள் என்று கருத்து கூறி மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளார் இயக்குனர் சேரன் .

நான் கூறிய கருத்தில் எந்த தவறும் இல்லை. அதில் வருத்தப்பட எதுவும் இல்லை. என்று தமிழ் ஊடகமொன்றுக்கு வழங்கிய தொலைபேசி செவ்வியில் தெரிவித்துள்ளார்.

நான் நிறைய இலங்கை தமிழர்களுடன் பழகுபவர் . அவ்வாறு என்னுடன் நெருக்கமாக உள்ள யாரும் எனது கருத்து குறித்து எந்த விதமான குற்றமும் சொல்லவில்லை. எனக்கு வேண்டாதவர்களே இவ்வாறு குற்றம் சொல்கின்றார்கள் என்றும் கூறியுள்ளார்.

அதே போன்று , நான் கூறிய கருத்தில் எந்த தவறும் இல்லை . இலங்கை தமிழர்கள் இணையங்களில் படங்களை பதிவேற்ற செய்கின்றார்கள் என்ற உண்மையை தான் சொல்லி உள்ளேன். அந்த கருத்தினை யாருவது மறுப்பதற்கு உள்ளார்களா?

திரையுலகம் திருட்டு DVD பிரச்சனையில் துவண்டு கிடந்த போது இவ்வாறான இலங்கை தமிழர்கள் யாராவது எங்களுக்கு ஆதரவாக குரல் குரல் கொடுத்தார்களா?

சேரன், இலங்கை தமிழர்களுக்காக போராடிய போது சேரன் ஏன் இலங்கை தமிழர்களுக்காக போராடுகின்றீர்கள் என்று கேட்காத நபர்கள் இன்று திருட்டு DVD பற்றி நான் பேசியவுடன் இலங்கை தமிழர்களுக்காக உங்களை யார் போராடச்சொன்னது யார்? என்று கேள்வி கேட்கின்றார்கள் என்றும் கருத்து கூறியுள்ளார்கள்.

அகதி என்ற அடையாளமே ஒரு அழுக்கு. அந்த அடையாளத்துடன் வாழ்ந்து கொண்டு திருடுவது தப்பு என்று கூறி அவர்களை நல்வழிப்படுத்துவது தவறானது என்றால் அதனை எவ்வாறு எடுத்துக்கொள்வது என்றும் கேள்வி எழுப்பி உள்ளார்.

இவ்வாறானவர்கள் எனது படத்தை பார்க்க விரும்பவில்லை என்றால் அதனை நான் சந்தோசமாக ஏற்றுக்கொள்கின்றேன் . இனி இலங்கை தமிழர்களை பற்றி எந்த ஒரு இடத்திலும் நான் பேச போவதே கிடையாது . சேரன் என்கின்ற மனிதன் இறந்தால் கூட நீங்கள் யாரும் வர வேண்டாம். அந்த செய்தியை கூட வெளியிட வேண்டாம் என்று ஆதங்கத்துடன் பேசியுள்ளார்.

எங்களுக்கு அகதியாக வாழனும் என்று ஆசையா..? நாங்களாகவா நீங்கள் சொல்லும் அந்த அழுக்கை எடுத்து பூசிக்கிறோம்..? நாமும் ஓர் தமிழ் இனம் தான் இனியும் ஈழத்தமிழர்களை நீங்கள் இப்படி கீழ்த்தரமாக விமர்சிப்பீர்களாக இருந்தால், தமிழர்கள் வாழுகின்ற எந்தவொரு நாட்டிற்கு சென்றாலும்…. அதற்குரிய விருதினை நிச்சயமாக வாங்கியேதீர்வீர்கள்!!!!

Share This:
Loading...

Recent Posts

Loading...