காதலன் வீட்டு வாசலில் தீக்குளித்த காதலி..! காரணம் தெரியுமா..?

Share this post:

kaa

காதலன் வீட்டின் முன்பு தீக்குளித்த காதலியின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சியில் லிங்கம் பகுதியை சேர்ந்த மின்வாரிய ஊழியரின் மகள் சாந்தி(21), இவர் அங்குள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார்.

இவர் அதே பகுதியை சேர்ந்த வாசு என்ற வாலிபரை26), காதலித்து வந்துள்ளார். இக்காதலுக்கு பெண்வீட்டார் எதிர்ப்பு தெரிவிக்கவே, வாசுவின் பெற்றோர் வீட்டை காலி செய்து அருகில் உள்ள ஊருக்கு குடிபெயர்ந்தனர்.

இதனால் காதலி, தன்னுடைய காதலனுக்கு பல முறை தொலைபேசியில் தொடர்பு கொண்டும், அவர் பேசவே இல்லை.

இதனால் விரக்தியடைந்த அவர் காதலன் வீட்டிற்கு சென்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு வீட்டிற்கு வெளியில் வருமாறு அழைத்துள்ளார். ஆனால் அவர் வர மறுக்க, காதலி தான் கொண்டுவந்திருந்த மண்ணெண்ணெயை தன் உடலில் ஊற்றி தீவைத்து கொண்டார்.

இவரின் அலறல் சத்தம் கேட்டு வெளியே வந்த காதலன் தீயை அணைக்க முற்பட்ட போது, அவருக்கும் தீக்காயம் ஏற்பட்டது.

இவர்கள் இருவரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

Share This:
Loading...

Related Posts

Loading...