கடலில் தத்தளித்த நண்பனைக் காப்பாற்ற அடுத்தடுத்து குதித்த 4 நண்பர்கள் – அனைவரும் கடலில் மூழ்கிப் பலி – இலங்கைத் தமிழ் இளைஞர்களுக்கு நடந்த சோகம்..! (Photos)

Share this post:

இங்கிலாந்தின் சசெக்சில் கடலில் மூழ்கி உயிரிழந்த இலங்கையைச் சேர்ந்த 5 தமிழ் இளைஞர்களின் படங்கள் மற்றும் பெயர் விபரங்கள் வெளியாகியுள்ளன.

நிதர்சன் ரவி (22) , இந்துசன் (23) , கோபிநாதன் (22) , கென் நாதன் (19) மற்றும் குருசாந்த் (27) ஆகியோரே உயிரிழந்துள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

கிழக்கு சசெக்ஸ் பகுதி கடற்கரையொன்றில் நீராடிக்கொண்டிருந்த போதே இவர்கள் ஐவரும் கடலில் மூழ்கியுள்ளனர்..

அவர்களின் சடலங்கள் பின்னர் மீட்கப்பட்டிருந்த நிலையில், அனைவரும் தென் கிழக்கு லண்டனில் , கிறீன்விச் பகுதியைச் சேர்ந்தவர்கள் என அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இவர்கள் சிறு வயது முதலே நல்ல நண்பர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த இளைஞர்கள் ஐவரும் தென் கிழக்கு லண்டனின் கிரீன்விச் பிரதேசத்தில் வசித்து வந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐவரில் இரண்டு பேர் சகோதர ர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.. மேலும் இரண்டு நண்பர்கள் கடலில் த த்தளித்த போது அவர்களை காப்பாற்றச் சென்ற மற்றைய மூவரும் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை இவர்கள் மூழ்கிய நேரத்தில் அங்கு வாழ்வுக் காப்பாளர்கள் எவரும் இருக்கவில்லை என குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

மேலும் இவர்களது ஆடைகளை வைத்து ஆரம்பத்தில் இவர்கள் புகலிடக்கோரிக்கையாளர்கள் என தவறுதலாக ஊகிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

ila

2

1

Share This:
Loading...

Related Posts

Loading...