இன்றைய நாள் உங்களுக்கு இனிய நாளாக அமையுமா இதைக் கொஞ்சம் படித்து தெரிந்து கொள்ளுங்களேன் – இன்றைய ராசிபலன் 27.08.2016

Share this post:

rasipalan

மேஷம்
மனதில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். அனைவரிடமும் சாந்த குணத்துடன் பழகுவீர்கள். தொழில், வியாபாரத்தில், ஆதாயம் அதிகரிக்கும். புதிய முயற்சியால், நீண்டநாள் விருப்பம் நிறைவேறும்

ரிஷபம்:
பேச்சு, செயலில் நிதானம் தேவைப்படும். தொழில், வியாபாரத்தில் உள்ள சிரமங்களை, பிறரிடம் விவாதிக்க வேண்டாம். வருமானம் சுமார். உடல் நலனில் அக்கறை கொள்வது நல்லது.

மிதுனம்:
எதிர்மனப்பாங்கு உள்ளவர் விலகுவர். தைரிய மனதுடன் பணிகளில் ஈடுபடுவீர்கள். தொழில், வியாபார வளர்ச்சியால், வருமானம் அதிகரிக்கும். உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி அடைவீர்கள்.

கடகம்:

நிதானித்து செயல்படுவது அவசியம். தொழிலில், மிதமான லாபம் கிடைக்கும். உடல் நலத்திற்கு தகுந்த சிகிச்சை தேவைப்படும். வெளியூர் பயணத்தில், திடீர் மாறுதல் உண்டாகும்.

சிம்மம்:
நண்பர்கள் அன்பு பாராட்டுவர். தொழில், வியாபாரத்தில், வளர்ச்சி இலக்கு நிறைவேறும். ஆதாயம் உயரும். பெண்கள் வீட்டு உபயோகப் பொருள் வாங்குவர். மாணவர்கள் ஆர்வத்துடன் படிப்பர்.

கன்னி:
உங்களின் இனிய அணுகுமுறையால், நற்பலன் உண்டாகும். தொழில், வியாபாரத்தில், எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். நிலுவைப்பணம் வசூலாகும். விருந்து விழாவில் கலந்து கொள்வீர்கள்.

துலாம்:
பிறருக்காக, எவ்வித பொறுப்பையும் ஏற்க வேண்டாம். தொழில், வியாபாரத்தில் குறுக்கிடும் சிரமங்களை சரி செய்வீர்கள். லாபம் சுமார். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும்.

விருச்சிகம்:
மற்றவர் எதிர்ப்பை பெருட்படுத்த வேண்டாம். சக தொழில், வியாபாரம் சார்ந்தவர்களின் உதவி கிடைக்கும். பெண்களுக்கு, பணத் தேவையின் அளவு அதிகரிக்கும். உடல் நலனில் அக்கறை கொள்வீர்கள்.

தனுசு:
அவமதித்து பேசியவரும் அன்பு பாராட்டுவர். மனதில் புத்துணர்வு நிறைந்திருக்கும். தொழில், வியாபார வளர்ச்சியால், லாபம் அதிகரிக்கும். எதிர்பார்த்த சுபச் செய்தி வந்து சேரும்.

மகரம்:
பிறர் நலனில் அக்கறை கொள்வீர்கள். புதிய முயற்சியில், வெற்றி உண்டாகும். தொழில், வியாபாரத்தில், வளர்ச்சிப்பணி சிறப்பாகும். லாபம் கூடும். ஆரோக்கியம் பலம் பெறும்.

கும்பம்:
பொழுது போக்காக பேசுபவரிடம் இருந்து விலகுவது நல்லது. தொழில், வியாபாரத்தில், பணிச்சுமை அதிகரிக்கும். பணவரவு திருப்தியளிக்கும். பெண்கள், வீட்டு உபயோகப் பொருள் வாங்குவர்.

மீனம்:
நண்பரின் ஆலோசனையால் நன்மை உண்டாகும். தொழில், வியாபாரத்தில், அளவான மூலதனம் போதும். லாபம் மிதமாக இருக்கும். கண்களின் பாதுகாப்பில் தகுந்த கவனம் தேவை.

Share This:
Loading...

Related Posts

Loading...