நடிகர்களுக்காக சண்டை போட்டுக்கொண்ட நண்பர்கள் – கொலையில் முடிந்த சோகம்…!

Share this post:

nad

தெலுங்கு திரையுலகின் பவர் ஸ்டார் நடிகர் பவன் கல்யாணின் தீவிர ரசிகரான வினோத் குமார், ஜூனியர் என்.டி.ஆர்-பவன் கல்யாண் ரசிகர்களிடையே நடந்த மோதலில் உயிரிழந்தார். இத்தகவலறிந்த வருத்தமடைந்த பவன் கல்யாண் திருப்பதியில் உள்ள வினோத் குமாரின் இல்லத்திற்கு சென்று அவரது குடும்பதாருக்கு ஆறுதல் கூறியுள்ளார்.

இச்சம்பவம் குறித்து, போலீஸாரிடம் உரிய விசாரணை நடத்த வேண்டும் என கேட்டுக் கொண்ட பவன் கல்யாண், தேவைப்பட்டால் சிபிஐ விசாரணைக்கும் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் இதுபோன்று வன்முறையில் ரசிகர்கள் இறங்க வேண்டாம் என்றும் பவன் கல்யாண் ரசிகர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

Share This:
Loading...

Recent Posts

Loading...