இலங்கையில் மூன்று வருடங்களில் 9,657 பேர் தற்கொலை!

Share this post:

su

இலங்கையில் கடந்த மூன்று வருடங்களில் 9 ஆயிரத்து 657 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக சட்டமும் ஒழுங்கும் அமைச்சு தெரிவித்தது.

நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின்போது, 2013, 2014 மற்றும் 2015ஆம் ஆண்டுகளில் இடம்பெற்ற தற்கொலைகளின் எண்ணிக்கை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு சட்டமும் ஒழுங்கும் அமைச்சு சபையில் சமர்ப்பித்த பதிலிலேயே மேற்படி தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, 2013ஆம் ஆண்டு 752 பெண்களும், 2 ஆயிரத்து 703 ஆண்களும், 2014ஆம் ஆண்டில் 660 பெண்கள் உட்பட 2 ஆயிரத்து 484 பேரும் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

2015ஆம் ஆண்டு 669 பெண்களும், 2 ஆயிரத்து 389 ஆண்களுமாக மொத்தம் 3 ஆயிரத்து 58 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

2013, 2014ஆம் ஆண்டுகளில் இரத்தினபுரி பொலிஸ் பிரிவிலேயே கூடுதல் தற்கொலைகள் இடம்பெற்றுள்ளன என்றும், 2015ஆம் ஆண்டு கண்டி பொலிஸ் பிரிவில் கூடுதலான தற்கொலை சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share This:
Loading...

Related Posts

Loading...