அனைத்து தொழிலாளர்களினதும் அடிப்படை சம்பளத்தை 40ஆயிரமாக உயர்த்த அரசாங்கம் திட்டம்…! – சாத்தியமாகுமா…?

Share this post:

sals

தொழிலாளர்களின் ஆகக்குறைந்த அடிப்படைச் சம்பளம் 40 ஆயிரம் ரூபாவாக உயர்த்தப்படுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான ஸ்ரீகொத்தாவில் இன்று நடைபெற்ற தேசிய தொழிலாளர் சங்கத்தின் வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

மேலும், தொழிலாளர்களின் ஆரம்ப அடிப்படைச் சம்பளத்தை 40 ஆயிரம் ரூபாவாக உயர்த்துவது தொடர்பில் அரசாங்கம் தொழில் கொள்வோருடன் பேச்சுவார்த்தைகளை நடாத்தி வருகின்றது.

இதற்கு அனைவரும் தமது ஒத்துழைப்புகளை வழங்க வேண்டும் எனவும் பிரதமர் கேட்டுக்கொண்டார். எதிர்வரும் இரண்டொரு வருடங்களுக்குள் இந்த இலக்கை அடைந்து கொள்ளும் வகையில் அரசாங்கம் தனது நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.

வெளிநாடுகளில் ஒரு தொழிலாளி குறைந்தது 300 டொலர் மாதாந்த சம்பளம் பெற்றுக் கொள்ளக் கூடியதாக உள்ளது. அந்த நிலை இலங்கையிலும் ஏற்படுத்தப்பட வேண்டும்.

அதன் மூலம் வெளிநாடு செல்வோரின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு, நாட்டின் முன்னேற்றம் கருதி மனிதவளம் முழுமையாக பயன்படுத்தப்பட வேண்டும் என்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

Share This:
Loading...

Related Posts

Loading...