யாழில் மகனின் வெளிநாட்டு ஆசையை தீர்க்க வீடடை விற்று வெளிநாடு அனுப்பிய தாய் -திருப்பி அனுப்பிய அதிகாரிகள் – வீதிக்கு வந்த வயோதிபத்தாயின் சோகம்…!

Share this post:

ve

மகனின் வெளிநாட்டு ஆசையால் வாழ்வாதாரத்திற்கு சிரமப்பட்டுவருவதாக 70 வயது நிரம்பிய
மூதாட்டி ஒருவர் தெரிவித்து;ளளார். இது குறித்து மேலும் தெரியவந்துள்ளதாவது.

காரைநகர் ஊரிப் பகுதியில் எழுபது வயது நிரம்பிய மூதாட்டி ஒருவர் தனிமையில் வாழ்ந்துவருகின்றார். இவரின் கணவர் இருபது வருடங்களுக்கு முன்பே இறந்துவிட்டார். ஒரேயொருமகனுடன் தனது கணவன் கட்டியவீட்டில் வாழ்ந்திருந்தார். மகன் அரபுநாடொன்றில் வேலைசெய்யப் போவதாகக் கூறி தாயாரின் நகைகளை அடகு வைத்துள்ளார். இருப்பினும் அரபு நாட்டில் வேலைசெய்வது கடினமெனக் கூறி மீண்டும் இலங்கைக்கு திரும்பியுள்ளார்.

சிலகாலம் களிந்து ஐரோப்பிய நாடொன்றிற்கு போவதாகக் கூற தாயிடம் பணம் கேட்டு தொல்லைப்படுத்தியுள்ளார். மகனின் தீராததொல்லையால் தனதுவீட்டை விற்று கேட்டபணத்தைக் கொடுத்துள்ளார். தன்னிடம் எஞ்சியபணத்தைக் கொண்டு,தன் பழையகடன்களையும் தீர்த்துள்ளார்.
இருப்பினும் ஐரோப்பியநாடொன்றைநோக்கிப் பயணித்த மகன் பிரான்ஸ் நாட்டு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு சொந்தநாட்டிற்கு திருப்பி அனுப்பப்ட்டுள்ளார்.

தாயாரின் சொத்துக்கள் சகலவற்றையும் தேவையற்ற முறையில் செலவழித்ததுடன் தற்போது மகன் ர்ஊதாரித்தனமாககொழும்பில்; தங்கியிருந்து பணத்தைச் செலவிட்டுவருகின்றார். அடிக்கடி தன் செலவுக்குதாயாரிடம் பணம் கேட்டுதொல்லைகொடுத்தும் வருகின்றார்.

இதனால் வீட்டையும் சொத்தையும் இழந்ததாயார் தனது தள்ளாடும் வயதிலும் கூலிவேலைசெய்து வாழ்வதாகவும் வசிப்பதற்கு வீடு இல்லாத சூழ்நிலையில் தகரக் கொட்டிலொன்றில் வாழ்ந்துவருவதாகவும் மூதாட்டி கண்ணீரோடு தெரிவித்தார்.

Share This:
Loading...

Related Posts

Loading...