இலங்கைத் தமிழர்களை நினைத்தால் அருவருப்பாக இருக்கிறது – நடிகர் சேரன் பரபரப்பு பேச்சு…

Share this post:

tha

நாளைய இயக்குனர் நிகழ்ச்சியின் இன்னொரு வரவு தியா. இவர் நடித்து இயக்கியிருக்கும் கன்னா பின்னா படத்தின் இசை வெளியிட்டு விழா இன்று கமலா திரையரங்கில் நடைபெற்றது.

இதில் பேசிய சேரன், தங்கர்பச்சான், ஜாக்குவார் தங்கம் மூவருமே திருட்டு டிவிடி, பைரஸிக்கு எதிராக பொங்கி தீர்த்துவிட்டனர்.

ஜாக்குவார் தங்கம் பேசும்போது ‘’திருட்டு டிவிடி, பைரஸில எவனாவது படம் பார்த்தா அவங்க காலை ஒடைப்பேன்’’ என ஆவேசமாக பேசி அமர்ந்தார்.

அடுத்து பேசிய சேரன் ‘’இந்த திருட்டு டிவிடி, பைரஸி எங்கேருந்து உருவாகுதுனு விசாரிச்சா இலங்கை தமிழர்கள்கிட்டேருந்து தான்னு தகவல் வருது. இலங்கை தமிழர்களுக்காக நாங்க எத்தனை போராட்டம் நடத்தியிருப்போம்? எவ்வளவு இழந்துருப்போம்? ஆனா அவங்க அதை கொஞ்சமாவது நினைச்சு பார்த்துருந்தா இதை பண்ணுவாங்களா? இவங்களுக்காகவா போராடினோம்னு நினைச்சா எங்களுக்கே அருவருப்பா இருக்கு.’’ என்று வேதனைப்பட்டார்.

இறுதியாக பேசிய பாக்யராஜ் இருவரையும் சமாதானப்படுத்தும் விதமாக பேசியது ஆறுதல். சேரன், ஜாக்குவார் தங்கம் பேசுவதற்கு முன்பே பேசிவிட்டு கிளம்பிவிட்டார் தயாரிப்பாளர் சங்க தலைவர் கலைப்புலி தாணு.

அதே இலங்கைத் தமிழர்களை நம்பித்தான் தமிழ் சினிமாவின் இன்றைய வெளிநாட்டு வியாபாரம் நடைபெறுகிறது என்பதை மறந்து விடடார் போல..?

அதுசரி… குழாயடில உருண்டு என்ன பிரயோஜனம்? கோவில்ல்ல உருளணும்…? இதை சொன்னா நம்மளை…!

Share This:
Loading...

Related Posts

Loading...