பிரபல தமிழ் நடிகரை உதட்டு முத்தம் கேட்டு துரத்தும் நடிகை..!

Share this post:

na

சசிகுமார் நடித்த வெற்றிவேல் படத்தில் தமிழுக்கு வந்தவர் மலையாள நடிகை நிகிலா விமல். அதையடுத்து மீண்டும் சசிகுமாரின் கிடாரி படத்திலும் நாயகியாக நடித்திருக்கிறார் நிகிலா. வெற்றிவேல் படத்தில் அமைதியான பெண்ணாக நடித்த நிகிலாவுக்கு இந்த படத்தில் துடுக்குத்தனமான வேடம் கொடுக்கப்பட்டிருக்கிறதாம்.

முக்கியமாக சசிகுமாரை காதலிக்கும் நிகிலா, அவரிடம் உதட்டு முத்தம் கேட்டு துரத்தும் சில்மிஷ காட்சிகளும் படத்தில் உள்ளது.இந்த காட்சிகளில் நடிப்பது பற்றி இயக்குனர் பிரசாந்த் முருகேசன் அவரிடம் விளக்கியபோது, சிறிதும் தாமதிக்காமல் இப்படி நடித்தால் போதுமா, இல்லை இப்படி நடிக்க வேண்டுமா? என்று உடனடியாக தனது பாணியில் இரண்டுவிதமாக நடித்துக்காட்டினாராம் நிகிலா.

அந்த இரண்டுமே சூப்பராக இருந்ததால், அந்த காட்சியை நிகிலாவின் விருப்பம் போலவே நடிப்பதற்கு ஓகே சொல்லிவிட்டாராம் டைரக்டர். அதனால், அதிக டேக் எடுத்துக்கொள்ளாமல் ஓரிரு டேக்குகளிலேயே சசிகுமாரிடம் லிப் லாக் கேட்டு துரத்தும் அந்த காட்சிகளில் நடித்து கைதட்டு வாங்கினாராம் நிகிலா.

Share This:
Loading...

Recent Posts

Loading...