மரண அறிவித்தல் திரு வேலன் முருகேசு

Share this post:

murukesu
பிறப்பு : 25 ஒக்ரோபர் 1940 — இறப்பு : 23 ஓகஸ்ட் 2016
யாழ். கைதடி மேற்கைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட வேலன் முருகேசு அவர்கள் 23-08-2016 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வேலன் பூரணம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான வைரவன் முதலிச்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கதிராசி அவர்களின் அன்புக் கணவரும்,

சிறிபாஸ்கரன்(கனடா), விமலா(சுவிஸ்), விவேகராஜா(இலங்கை) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சீதேவி(இலங்கை), சிவசோதி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சந்திரன்(சுவிஸ்), வசந்தா(கனடா), நந்தினி(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான சின்னத்துரை குணம், காலஞ்சென்ற மாணிக்கம், மற்றும் கந்தையா(கனடா), சின்னையா(இலங்கை), கந்தையா(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சபீனா, றெமிதா, அபிஷா, பிரவீன், சோபிகா, யஸ்மிதன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 28-08-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டு, 29-08-2016 திங்கட்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் ஊரியான் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
கைதடி மேற்கு,
கைதடி,
யாழ்ப்பாணம்.

தகவல்
மனைவி, பிள்ளைகள்

தொடர்புகளுக்கு
விவேகராஜா(மகன்) — இலங்கை
தொலைபேசி: +94217201816
சந்திரன் விமலா(மகள்) — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41564411569
சிறிபாஸ்கரன்(மகன்) — கனடா
தொலைபேசி: +14169011824

Share This:
Loading...

Recent Posts

Loading...