இளைஞர், யுவதிகளுக்கு முழுநேர உடனடி வேலைவாய்ப்பு…தவற விடாதீங்க…

Share this post:

jo

இலங்கை சிறைச்­சா­லைகள் திணைக்­க­ளத்­தினால் சிறைச்­சாலை பாது­கா­வலர் பத­விக்கு ஆட்­சேர்ப்­ப­தற்­கான விண்­ணப்­பங்கள் கோரப்­பட்­டுள்­ளன என பதுளை மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும் மலை­யக மக்கள் முன்­ன­ணியின் நிதிச்­செ­ய­லா­ளரும் தமிழ் முற்­போக்கு கூட்­ட­ணியின் உப­த­லை­வ­ரு­மான அ. அர­விந்தகுமார் தெரி­வித்­துள்ளார்.

இலங்கை சிறைச்­சா­லைகள் திணைக்­க­ளத்­தினால் சிறைச்­சாலை பாது­கா­வலர் பத­விக்கு ஆட்­சேர்ப்­ப­தற்­கான விண்­ணப்­பங்கள் கோரப்­பட்­டுள்­ளன.

இப்­ ப­த­விக்­கான கல்வித் தக­மைகள் இருப்­பவர்கள் அனை­வரும் இவ் ­வெற்­றி­டங்­க­ளுக்கு தவ­றாது விண்­ணப்­பிக்க வேண்டும்.

இந்தச் சந்­தர்ப்­பத்தை பயன்­ப­டுத்திக் கொள்­ளு­மாறும் அவர் கேட்­டுள்ளார். இது தொடர்­பான விளக்­கங்கள் கீழே தரப்­பட்­டுள்­ளது.

கல்­வித்­த­கைமை – கல்வி பொதுத்­த­ரா­தர சாதா­ர­ண­தர பரீட்­சையில் தமிழ் மற்றும் கணிதம் உட்­பட இரண்டு பாடங்­களில் திறமை சித்­தி­க­ளுடன் 6 பாடங்­களில் இரண்டு அமர்­வு­க­ளுக்கு மேற்­ப­டாமல் சித்­தி­ய­டைந்­தி­ருத்தல் வேண்டும்.

இப்­ ப­த­விக்கு ஆண், பெண் இரு­பா­லாரும் விண்­ணப்­பிக்­கலாம்.
ஆண்­களின் உயரம் – ஆகக் குறைந்­தது 5 அடி 4 அங்­கு­ல­மாக இருத்தல் வேண்டும். வெளிச் ­சு­வா­சத்­து­ட­னான மார்பின் அளவு 32 அங்­கு­ல­மாக இருத்தல் வேண்டும்.

பெண்­களின் உயரம் – ஆகக் குறைந்­தது 5 அடி 2 அங்­கு­ல­மாக இருத் தல் வேண்டும்.

வய­தெல்லை – 18 வய­துக்கு குறை­யா­த­வ­ரா­கவும் 30 வய­திற்கு மேற்­ப­டா­த­வ­ரா­கவும் இருத்தல் வேண்டும். விண்­ணப்­பப்­ப­டி­வத்தின் முடி­வுத்­தி­கதி 05.09.2016 ஆகும்.

மேற்­படி பத­விக்கு விண்­ணப்­பிப்­ப­வர்கள் விண்­ணப்­பப்­ப­டி­வங்­களை வர்த்­த­மா­னியில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ள­வாறு தங்­க­ளது மாவட்ட உதவி சிறைச்­சாலை அதி­கா­ரிக்கு அனுப்­பபுதல் வேண்டும்.

விண்­ணப்­பப்­ப­டிவம் அனுப்­பப்­படும் கடித உறையின் இடது பக்க மேல் மூலையில் “ சிறைச்­சாலை பாது­கா­வலர் பத­வி­க­ளுக்­கான ஆட்­சேர்ப்பு – 2016” என குறிப்­பிட்டு பதி­வுத்­த­பாலில் 2016.09.05 ஆந் திக­திக்கு அல்­லது அதற்கு முன்­ப­தாக விண்­ணப்­பப்­ ப­டி­வங்­கள் அனுப்­பப்­படல் வேண்டும்.

இவ் விண்ணபப் படிவங்களை அருகில் உள்ள புத்தகசாலைகளில் பெற்றுக்கொள்ளமுடியும் ..!

Share This:
Loading...

Related Posts

Loading...