நீதிமன்றுக்குள் ஆடைகளை கிழித்துக்கொண்டு சண்டையிட்ட இரு பெண்கள்- விளக்கமறியலில் போட்ட நீதிபதி…!

Share this post:

nee

கொழும்பு-புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் ஆடைகளை கிழித்துக்கொண்டு அடித்து சண்டையிட்டுக்கொண்ட இரண்டு பெண்களை எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மேலதிக நீதவான் ஒகஸ்டா அதபது உத்தரவிட்டார். சாந்தமாலி பெரேரா(வயது 28) மற்றும் சுதாச்சாரி மாலினி (வயது 42) ஆகியோரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இரு வேறு குற்றச்சாட்டின் பேரில் மாலினியின் கணவரும் அவரது மகனும் வெலிக்கடை சிறைச்சாலையில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்காக பிணை கோரி புதுக்கடை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு, விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, மாலினி மன்றுக்கு பிரவேசித்தார். இதன்போது, சாந்தமாலி, ‘கள்ளனின் தாய் வந்துள்ளார்’ என கூச்சலிட்டுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த மாலினி நீதிமன்றத்துக்குள் அவருடன் முரண்பட்டதையடுத்து, இருவரும் ஆடையை கிழித்துக்கொண்டு அடித்துக்கொண்டனர். இதனைத்தொடர்ந்து நீதிமன்றத்தின் நடவடிக்கையை குழப்பியதற்காகவும் அநாகரீகமாக நடந்துகொண்ட குற்றச்சாட்டுக்காகவும் இருவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

Share This:
Loading...

Related Posts

Loading...