காதலைப் பிரிக்க மகளை 4 மாதம் மயக்க நிலையில் வீட்டுச்சிறையில் வைத்த பெற்றோர்…!

Share this post:

makal

திருச்சி அருகே காதலை பிரிக்க பெற்றோரால் வீட்டுச்சிறையில் அடைத்து வைக்கப்பட்ட இளம்பெண்ணை போலீசார் மீட்டனர். திருச்சி அருகே காதலை பிரிக்க வீட்டுச்சிறையில் வைக்கப்பட்ட இளம்பெண் மீட்பு

அஸ்வின், கற்பகம் இருவரும் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை படத்தில் காணலாம்.

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூரைச் சேர்ந்தவர் வேலாயுதம், ரியல் எஸ்டேட் அதிபர். இவரது மகள் கற்பகம் (வயது 24). இவர் சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

அப்போது அங்கு அவருடன் பணியாற்றிய சென்னையைச் சேர்ந்த அஸ்வின் என்பவருடன் காதல் ஏற்பட்டது. இருவரும் நீண்ட நாட்களாக காதலித்து வந்தனர். இதற்கு கற்பகத்தின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனாலும் கற்பகம் காதலை கைவிடவில்லை.

இதனால் கற்பகத்தின் பெற்றோர் தங்கள் மகளை திருவெறும்பூர் அழைத்து வந்தனர். கடந்த 4 மாதமாக கற்பகத்தை எங்கும் செல்ல விடாமல் வீட்டிலேயே வைத்திருந்தனர்.

இந்த நிலையில் கற்பகத்தை அவரது பெற்றோர் அவர் வெளியில் செல்லாமல் இருக்க வேண்டும் என்பதற்காக அதிகளவில் மாத்திரைகளை கொடுத்து மயக்க நிலையிலேயே வைத்திருப்பதாக கூறப்பட்டது. இது குறித்து திருவெறும்பூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதை தொடர்ந்து திருவெறும்பூர் போலீசார் நேற்று அங்கு சென்று கற்பகத்தை மீட்டனர். அதன் பிறகு அவரை திருவெறும்பூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

இந்த நிலையில் கற்பகத்தின் காதலன் அஸ்வின் மற்றும் அவரது குடும்பத்தினர் இன்று திருவெறும்பூர் ஏ.எஸ்.பி. அலுவலகத்திற்கு இன்று வந்தனர். அவர்கள் அங்கு போலீசாரிடம் மனு ஒன்று கொடுத்தனர். அதில் கூறியிருப்பதாவது:-

கற்பகம், சென்னையில் தங்கி வேலைப் பார்த்து கொண்டிருந்த போது எனக்கும் (அஸ்வின்) கற்பகத்துக்கும் காதல் ஏற்பட்டது. இது குறித்து நான் எனது பெற்றோரிடம் கூறினேன். அதற்கு அவர்கள் சம்மதம் தெரிவித்தனர்.

பின்னர் கற்பகத்தின் பெற்றோரிடம் இது குறித்து சம்மதம் கேட்ட போது அவர்கள் மறுத்து விட்டனர். மேலும் சம்மதம் இன்றி திருமணம் செய்து கொண்டால் எங்களை வாழ விடமாட்டோம் என மிரட்டினர். பின்னர் கற்பகத்தை சென்னையிலிருந்து திருவெறும்பூர் அருகே உள்ள அவரது சொந்த கிராமத்திற்கு அழைத்துச் சென்று அவரை தனி அறையில் வைத்து கொடுமைப்படுத்தியுள்ளனர்.

இது குறித்து கற்பகம் ரகசியமாக எனக்கு செல்போன் மூலம் தெரியப்படுத்தினார். கற்பகத்தை மீட்டு என்னுடன் அனுப்ப வேண்டும். கற்பகத்துக்கு அவர்கள் பெற்றோர் வீட்டில் பாதுகாப்பு இல்லை. கற்பகத்தை என்னுடன் திருமணம் செய்து வைக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Share This:
Loading...

Related Posts

Loading...