நல்லூர் ஆலய சூழலில் செருப்புடன் நடமாடிய இருவருக்கு நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு…!

Share this post:

nallu

நல்லூர் ஆலய சூழலில் செருப்புடன் நடமாடிய இருவர் கைது செய்யப்பட்ட நிலையில் இன்று பத்தாயிரம் ரூபா பெறுமதியான சொந்தப் பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

கடந்த 8ஆம் திகதி நல்லூர் ஆலய உற்சவம் ஆரம்பமாகி வெகு சிறப்பாக இடம்பெற்று வருக்கின்றது. இந்நிலையில் ஆலய சூழலில் காலணிகளுடன் நடமாட வேண்டாம் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எனினும், நேற்று இரவு செருப்புடன் இருவர் ஆலய சூழலில் நடமாடியுள்ளனர். இதன் போது சிவில் உடையில் இருந்த பொலிஸார் குறித்த இருவரையும் யாழ். பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று முறைப்பாடு பதிவு செய்தனர்.

இந்நிலையில், குறித்த இருவரையும் யாழ். நீதிவான் நீதிமன்ற பதில் நீதிவான் சரோஜினிதேவி இளங்கோவன் முன்னிலையில் இன்று ஆஜர்படுத்தினர்.

இதன் போது குறித்த வழக்கை எதிர்வரும் 5ஆம் திகதிக்கு ஒத்திவைத்த நீதிபதி, இளைஞர்கள் இருவரையும் 10 ஆயிரம் ரூபா பெறுமதியான சொந்தப் பிணையில் செல்ல அனுமதி வழங்கியுள்ளார்.

Share This:
Loading...

Related Posts

Loading...