நீலநிறமாக காட்சியளிக்கும் யாழ்ப்பாணம் காரணம் என்ன..?

Share this post:

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தன்னுடைய 65 ஆவது ஆண்டு நிறைவு விழாக்கொண்டாட்டத்திற்கு தயாராகி வருகின்ற நிலையில், இந்த வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வினை கொண்டாடுவதற்கு யாழ் குடாநாடும் தயாராகி வருகின்றது.

இலங்கையின் முன்னாள் பிரதமர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கவினால் 1951 ஆம் ஆண்டு ஸ்தாபித்து இன்று பெரு விருட்சம்போல எழுச்சியடைந்திருக்கும் கட்சியான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தன்னுடைய 65 ஆவது ஆண்டு நிறைவு விழாக் கொண்டாட்டத்திற்கு தயாராகி வருகின்றது.

எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க, ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க, சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, மகிந்த ராஜபக்ஷ, மைத்திரிபால சிறிசேன என தலைவர்கள் பலரை உருவாக்கிய இக்கட்சி, எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 4 ஆம் திகதியுடன் ஸ்தாபிக்கப்பட்டு 65 ஆண்டுகள் பூர்த்தியடையவுள்ளது.

இந்த வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வினை கொண்டாடுவதற்கு யாழ் குடாநாடும் தயாராகி வருகின்றது.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும், யாழ் மாவட்ட அமைப்பாளருமான அங்கஜன் இராமநாதன் இதற்கான நடவடிக்கைகளை யாழ்ப்பாணத்தில் முன்னெடுத்து வருகின்றார்.

இதன் முதல் அங்கமாக யாழ் குடாநாட்டின் முக்கிய வீதிகள் யாவும் நீலவர்ண கொடிகளினால் அலங்கரிக்கப்பட்டு வருகின்றமையினை காணக்கூடியதாக இருக்கின்றது.

இம்முறை ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 65 ஆவது ஆண்டு நிறைவு விழாவானது ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் குருணாகலில் இடம்பெறள்ளமை குறிப்பிடத்தக்கது.

1

2

3

4

Share This:
Loading...

Related Posts

Loading...