நேருக்கு நேர் மோதிக்கொண்ட மோட்டார் சைக்கிளும், வானும் பரிதாபமாகப் பறிபோன பெண்ணின் உயிர்…!(Photos)

Share this post:

திருகோணமலை சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஈச்சிலம்பற்று பூமரத்தடிச்சேனை பகுதியில் இடம் பெற்ற விபத்தின் போது பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக தெரியவருவதாவது,

இன்று காலை திருகோணமலை சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஈச்சிலம்பற்று பூமரத்தடிச்சேனை பகுதியில் மோட்டார் சைக்கிளும் வான் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த பெண் உயிரிழந்துள்ளார்.

உயிர் இழந்தவர் தோப்பூர் பட்டித்திடல் பகுதியைச் சேர்ந்த எஸ்.சந்தண லக்ஸ்மி வயது (46) என தெரியவந்துள்ளது.

உயிர் இழந்த பெண்ணிண் சடலம் தற்போது சேருநுவர வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை வான் சாரதியை பொலிஸார் கைது செய்துள்ளதுடன் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

pen

2

3

Share This:
Loading...

Related Posts

Loading...