மீன ராசிக்காரரா நீங்கள் உங்கள் செல்வம் பெருக அவசியம் இதை செய்யுங்க …

Share this post:

meenam

குருப்பெயர்ச்சிக்கு மீன ராசிக்காரர்கள் என்ன பரிகாரங்களை செய்ய வேண்டும் என்பதை பார்க்கலாம்.

குருப்பெயர்ச்சி: மீன ராசிக்காரர்கள் செய்ய வேண்டிய பரிகாரங்கள்
கடந்த சில வருடங்களாக பெரிய நன்மைகள் எதையும் அனுபவிக்காத மீன ராசிக்காரர்களுக்கு நல்ல மாற்றத்தைக் கொடுக்கக்கூடிய குருப்பெயர்ச்சியாக இது அமைகிறது. குருபகவான் இதுவரை இருந்து வந்த சாதகமற்ற நிலைகள் மாறி தற்போது ஏழாமிடத்தில் அமர்ந்து உங்கள் ராசியைப் பார்க்கப் போகிறார்.

ராசிநாதன் குருபகவான் ராசியைப் பார்க்கும் அமைப்பின்படி மீன ராசிக்காரர்களுக்கு இதுவரை முடங்கிப் போயிருந்த வருமான அமைப்புகள் அனைத்தும் மீண்டும் நல்லமுறையில் செயல்படத் துவங்கி எதிலும் வெற்றி கிடைக்கும் காலமாக இது இருக்கும். இதுவரை படிக்காத மாணவர்கள் படிப்பீர்கள். சரியான வேலை அமையாத இளைஞர்களுக்கு மனதிற்கு பிடித்த வேலை கிடைக்கும். திருமண பாக்கியம் அமையும்.

நடுத்தர வயதுக்காரர்களுக்கு எந்த விஷயத்தில் இதுவரை மனச்சங்கடங்கள் இருந்து வந்ததோ அவைகள் அனைத்தும் நல்லபடியாக விலக ஆரம்பித்து இனிமேல் மீனராசிக்காரர்கள் வெற்றிப் படிக்கட்டில் ஏற ஆரம்பிப்பீர்கள்.. இதுவரை கடன்தொல்லையில் அவதிபட்டவர்கள் கடனை படிப்படியாக அடைத்து சிக்கலில் இருந்து வெளியே வருவீர்கள்.

வேலை, தொழில், வியா பாரம் போன்ற அமைப்புகள் செழிப்பாக நடை பெற்று வருமானம் நன்றாக இருக்கும். திருமண வாழ்க் கையில் பிரச்னை உண்டாகி விவாகரத்திற்காக வழக்கு நீதிமன்றம் காவல்நிலையம் என்று நிம்மதியிழந்து அலைந்து திரிந்தவர்களுக்கு அனைத்தும் நல்லபடியாக ஒரு முடிவுக்கு வரும்.

இரண்டாவது வாழ்க்கை அமையும். உங்களின் ஜென்மநட்சத்திரம் அன்று கும்பகோணம் அருகில் உள்ள புகழ்பெற்ற குருபகவானின் திருத்தலமான ஆலங்குடி சென்று சிறப்பு ஆராதனைகளை செய்யுங்கள்.

மேலும் ஒரு வியாழக்கிழமை பகல் ஒரு மணியிலிருந்து இரண்டு மணிக்குள் குருஹோரையில் ஒரு யானைக்கு அதற்கு விருப்பமான உணவு என்ன என்று அதன் பாகனிடம் கேட்டுத் தெரிந்துகொண்டு உணவிடுவது குருபகவானால் கிடைக்கும் நன்மைகளை அதிகப்படுத்தும்.

Share This:
Loading...

Recent Posts

Loading...