இன்றைய நாள் உங்களுக்கு சிறப்பானதாக அமையுமா..? வாங்க தெரிஞ்சுக்கலாம் – 23. 08. 2016 இன்றைய ராசி பலன்கள்…

Share this post:

rasipalan

மேஷம்

ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் எடுத்த வேலையை முடிப்பதற்குள் அலைச்சல் அதிகரிக்கும். உறவினர், நண்பர்கள் பணம் கேட்டு தொந்தரவு தருவார்கள். அரசு காரியங்கள் இழுபறியாகும். சாலைகளை கவனமாக கடந்துச் செல்லுங்கள். வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம். உத்யோகத்தில் சக ஊழியர்களை அனுசரித்துப் போங்கள். அதிஷ்ட எண்: 4அதிஷ்ட நிறங்கள்: ஆலிவ் பச்சை, ரோஸ்

ரிஷபம்

திட்டமிட்ட காரியங்கள் கைக்கூடும். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். பயணங்கள் திருப்திகரமாக அமையும். வியாபாரத்தல் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். அதிஷ்ட எண்: 7அதிஷ்ட நிறங்கள்: இளஞ்சிவப்பு, க்ரீம் வெள்ளை

மிதுனம்

தவறு செய்பவர்களை தட்டிக் கேட்பீர்கள். உறவினர்கள், நண்பர்கள் உங்களை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பார்கள். பிரபலங்கள் உதவுவார்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரம் சூடுபிடிக்கும். உத்யோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரைகள் தருவார்கள். அதிஷ்ட எண்: 2அதிஷ்ட நிறங்கள்: அடர் சிவப்பு, கிரே

கடகம்

கணவன்-மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். செலவுகளைக் குறைக்க திட்டமிடுவீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கிகாரம் கிடைக்கும். அதிஷ்ட எண்: 8அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், வைலெட்

சிம்மம்

மூத்த சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். வாகனத்தை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். அதிஷ்ட எண்: 4அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, ஊதா

கன்னி

சந்திராஷ்டமம் தொடர்வதால் உங்கள் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். குடும்பத்தில் சிறு வார்த்தைகள் கூட பெரிய தகராறில் போய் முடியும். சந்தேகப் புத்தியால் நல்லவர்களை இழக்க வேண்டி வரும். சிலரின் தவறான செயல்களை எண்ணி வருந்துவீர்கள். வியாபாரத்தில் புது முயற்சிகள் வேண்டாம். உத்யோகத்தில் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. அதிஷ்ட எண்: 3அதிஷ்ட நிறங்கள்: இளஞ்சிவப்பு, பிங்க்

துலாம்

பணப்புழக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளால் சொந்த-பந்தங்கள் மத்தியில் செல்வாக்கு உயரும். அரசால் அனுகூலம் உண்டு. எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். அதிஷ்ட எண்: 7அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், வெளிர் நீலம்

விருச்சிகம்

குடும்ப வருமானத்தை உயர்த்த புது முயற்சிகளை மேற்கொள்வீர்கள். அநாவசியச் செலவுகளை கட்டுப்படுத்துவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். அதிஷ்ட எண்: 6அதிஷ்ட நிறங்கள்: கிரே, இளஞ்சிவப்பு

தனுசு

தடைகளைக் கண்டு தளரமாட்டீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். புது வேலை அமையும். தாயாருடன் வீண் விவாதம் வந்துப் போகும். பழைய கடனைத் தீர்க்க புது வழி யோசிப்பீர்கள். தொழில் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். அதிஷ்ட எண்: 1அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், கிளிப் பச்சை

மகரம்

குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். சொத்துப் பிரச்னைக்குசுமூக தீர்வு காண்பீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்யோகத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகம். அதிஷ்ட எண்: 5அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, ஊதா

கும்பம்

சுறுசுறுப்புடன் செயல்பட்டு தேங்கிக் கிடந்த வேலைகளை முடிப்பீர்கள். குடும்பத்தாரின் ஆதரவுப் பெருகும். அழகு, இளமைக் கூடும். ஆடை, ஆபரணம் சேரும். உறவினர்கள் மதிப்பார்கள். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். அதிஷ்ட எண்: 2அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், வெளீர் நீலம்

மீனம்

கடந்த இரண்டு நாட்களாக இருந்த உடல் அசதி, மனச் சோர்வு நீங்கும். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். நீங்கும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். வாகனப் பழுதை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் புது முதலீடு செய்வீர்கள். உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். அதிஷ்ட எண்: 9அதிஷ்ட நிறங்கள்: மிண்ட் கிரே, வைலெட்

Share This:
Loading...

Related Posts

Loading...